சென்னை: தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ள ‘சிங்கார சென்னை அட்டை’  உபயோகிக்கும் வகையில்,  11 மெட்ரொ ரயில் நிலையங்களில் பயண அட்டை ரீசார்ஜ் நிறுத்தம் செய்யப்பட இருப்பதாக, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதன்படி,  முதற்கட்டமாக, 11 மெட்ரோ ரயில் நிலையங்களில், சென்னை மெட்ரோ ரயில் பயண அட்டை ஏப்ரல் 1 முதல் நிறுத்தப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்தத்திற்கான மாதாந்திர பார்க்கிங் பாஸ் வருகிற பிப்ரவரி 1 முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மெட்ரோ ரயிலில் பயணிக்க, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன பயண அட்டையுடன், கூடுதலாக கடந்த 2023 ஏப்ரல் 14-ல், ‘சிங்கார சென்னை அட்டை’ அறிமுகம் செய்யப்பட்டது.

தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்த ‘சிங்கார சென்னை அட்டை’  திட்டத்துக்கு மக்களிடையே போதிய வரவேற்பு இல்லாத நிலையே உள்ளது. பயணிகள் செல்வதற்கு தேவையான பேருந்து போக்குவரத்து பல பகுதிகளில் முறையாக இல்லாததால், அதை மக்கள் வாங்க தயங்கி வருகின்றனர்.  அதனால் ஒவ்வொரு மெட்ரோ ரயில் நிலையம் அருகேயும் பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்றும்,  பேருந்து சேவைகளும் அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில்,  ‘சிங்கார சென்னை அட்டை’   பயணிகள் மத்தியில்  பிரபலப்படுத்தும் வகையில்,  வாங்கும் வகையில், மெட்ரோ ரயில் நிறுவனம், பயணச்சீட்டு ரீசார்ஜ் திட்டத்தை ரத்து செய்ய உள்ளது.

இந்த   ‘சிங்கார சென்னை அட்டை’    இன்னும் முழுமையாக பயன்பாட்டுக்கு வராதநிலையில்,  ஏப்ரல் 1 முதல் முழு பயன்பாட்டிற்கு வரும் என தமிழ்நாடு அரசு கூறி உள்ளது.  இதன் காரணமாக, 41 மெட்ரோ ரயில் நிலையங்களிலும், படிப்படியாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்பட உள்ளது.

இந்த ரயில் நிலையங்களில், பயண அட்டையை ரீசார்ஜ் செய்ய திட்டமிட்டு உள்ள பயணியர், பயண அட்டையில் உள்ள மீதித் தொகையை ஏப்., 1க்குள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதன்பின், மெட்ரோ ரயில்களில் பயணிக்க, வாகன நிறுத்தம் செய்ய, ‘சிங்கார சென்னை அட்டை’ பெற்று பயன்படுத்தும்படி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அனைத்து போக்குவரத்துக்கும் சிங்கார சென்னை அட்டை பயன்படுத்த வழிவகை செய்யப்படுவதால், இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

மெட்ரோ ரயில் நிலையங்களில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டை (Travel Card) விற்பனை மற்றும் ரீசார்ஜ் செய்யும் வசதி முதற்கட்டமாக 11 மெட்ரோ ரயில் நிலையங்களில் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயிலில் பயணிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டையுடன் கூடுதலாக 14.04.2023 முதல் தேசிய பொது போக்குவரத்து அட்டையை (சிங்கார சென்னை அட்டை) சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

01.04.2025 முதல் எஸ்பிஐ வழங்கிய தேசிய பொதுப் போக்குவரத்து அட்டைக்கு (சிங்கார சென்னை அட்டை) முழுமையாக மாற சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, 41 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் படிப்படியாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுகிறது.

முதல் கட்டமாக, புதிய வண்ணாரப்பேட்டை, காலடிப்பேட்டை, திருவொற்றியூர் தேரடி, திருவொற்றியூர், நந்தனம், சின்னமலை, ஓடிஏ- நங்கநல்லூர் சாலை, மீனம்பாக்கம், எழும்பூர், கீழ்ப்பாக்கம் மற்றும் செனாய் நகர் ஆகிய 11 மெட்ரோ ரயில் நிலையங்களில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டை விற்பனை / ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுகிறது.

அதன்படி, மேற்கூறிய மெட்ரோ ரயில் நிலையங்களில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டையை ரீசார்ஜ் செய்ய திட்டமிட்டுள்ள பயணிகள், தங்களது பயண அட்டையில் உள்ள மீதித் தொகையை மெட்ரோ ரயில்களில் பயணிப்பதற்கு அல்லது மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு பயன்படுத்திவிட்டு, மேலும் பயன்பாட்டிற்காக தேசிய பொது போக்குவரத்து அட்டையை (சிங்கார சென்னைஅட்டை) பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல, சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்தத்திற்கான மாதாந்திர பார்க்கிங் பாஸ் வருகிற பிப்ரவரி 1 முதல் நிறுத்தப்படுவ தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்தத்திற்கான மாதாந்திர பார்க்கிங் பாஸ் வருகிற பிப்ரவரி 1 முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்தும் இடங்களுக்கான தேவை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 01.02.2025 முதல் வாகனம் நிறுத்தத்திற்கான மாதாந்திர பார்க்கிங் பாஸ்கள் வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளது.

அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வாகனம் நிறுத்தும் இடங்கள் இனி பயன்படுத்தப்படும்.

பயணிகள் தங்களது நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை நிறுத்த இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளவும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு தங்கள் ஆதரவைத் தொடரவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஜனவரி 2025-ல் வாகனம் நிறுத்துவதற்காக ஏற்கனவே வாங்கப்பட்ட மாதாந்திர பார்க்கிங் பாஸ்கள் அவற்றின் செல்லுபடியாகும் காலம் முடியும் வரை அனுமதிக்கப்படும்.

பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணம்: ‘ஒன் சிட்டி ஒன் கார்டு’ திட்டம் இன்று தொடக்கம் !