சென்னை,
சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் பணிகள் ஒவ்வொரு பகுதியாக முடிக்கப்பட்டு ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
தற்போது அண்ணாநகர் திருமங்கலம் முதல் கீழ்ப்பாக்கம் நேரு பூங்கா வரையிலான சுரங்கபாதை பணிகள் முடிவடைந்துள்ளதால் இன்று ரெயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
சென்னையில் வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் நடந்து வருகின்றன.
இதில் 24 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கப்பாதையும், 21 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்த்தப்பட்ட பாதையும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
மெட்ரோ ரெயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்ட 45 கிலோ மீட்டர் தூரத்தில், கோயம்பேடு–ஆலந்தூர் மற்றும் விமானநிலையம்–சின்னமலை இடையே சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் போக்குவரத்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் திருமங்கலம்–நேரு பூங்கா இடையே 9 கி.மீ. தூரத்தில் சுரங்கப்பாதை பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று இந்த வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. விரைவில் ரெயில் ஓடத்தொடங்கும் என தெரிகிறது.