சென்னை:
சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கோடம்பாக்கம், தி.நகர், ஆர்.ஏ.புரம், மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரிகள் மூலம் செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே மந்தைவெளி, ஆர்.ஏ.புரம், கிரீன்வேஸ் சாலை பகுதிகளில் 4 நாட்களாக தண்ணீர் விநியோகம் இல்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாரிகளுக்கு போதிய அளவில் தண்ணீர் வழங்கவில்லையென உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.