சனிபகவானைத் தரிசனம் செய்ய முடியவில்லை என்று கவலைப்படுகிறீர்களா? 

Must read

சனிபகவானைத் தரிசனம் செய்ய முடியவில்லை என்று கவலைப்படுகிறீர்களா?

 
அந்த கவலை வேண்டாம் இணையம் மூலம் இனி சனிபகவானைத் தரிசனம் செய்வதோடு நவகிரக சாந்தி ஹோமத்தில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இணையவழி ஹோமத்தைத் தொடங்கி வைத்துப் பங்கேற்ற நாராயணசாமி, கொரோனா பாதிப்பில் இருந்து புதுச்சேரி மக்களும், நாட்டு மக்களும், உலக மக்களும் குணமடைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.
இதற்காக www.thirunallarutemple.org என்ற தேவஸ்தான வலைப்பக்கத்தில், ஹோமம் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் பக்தர்கள் தாங்கள் விரும்பும் கால பூஜைகளைப் பதிவு செய்து கொள்ளலாம். அவர்கள் பதிவு செய்த ஹோம பூஜைக்கான இணைப்பு அவர்களது மின்னஞ்சல் முகவரிக்கு பிரத்தியேகமாக அனுப்பி வைக்கப்படும். அதன் மூலம் அவர்கள் இ-நவக்கிரக சாந்தி ஹோமத்தில் பங்கு கொண்டு பயன்பெறலாம்.
இந்த இணையவழி ஹோமத்தைத் தொடங்கி வைத்த புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி நேற்று காலசாந்தி ஹோம பூஜையில் இணைய வழியில் அவரது வீட்டிலிருந்தே பங்கேற்று தரிசனம் செய்தார். அப்போது கொரோனா பாதிப்பிலிருந்து புதுவை மாநில மக்கள், இந்திய மக்கள், உலக மக்கள் அனைவரும் விரைவில் விடுபட்டு, வாழ்வில் எல்லா வளமும் பெற்றிட வேண்டி சங்கல்பம் செய்து சனீஸ்வர பகவான், பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் சுவாமிகளிடம் பிரார்த்தனை செய்தார்

More articles

Latest article