மெர்சல் படம்: ரசிகர்களுக்கு மரக்கன்று!

டிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படம் பல்வேறு தடைகளை கடந்து வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.

படத்தின் முதல் காட்சியை காண அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், படங்களை பார்க்க வரும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை இலவசமாக கொடுக்க திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

திரைப்படங்களை தியேட்டருக்கு வந்து பார்க்க ஊக்குவிக்கும் விதமாகவும், அதிக மக்களை தியேட்டரை நோக்கி வரவழைக்கவும் பொருட்டு மெர்சல் படத்தின் முதல்நாள் முதல் காட்சி அன்று  மரக்கன்றுகளை விநியோகிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் வெளியாகும் இந்த வரும் 18ந்தேதி மெர்சல் திரைப்படம் வெளியாக இருக்கிறது என்பதை படத்தினர்  இயக்குனர் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். மேலும், அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களையும் கூறினர்.
English Summary
Mersal First Day First Show tickets with saplings