சென்னை:

காவிரி வாரியம் அமைக்க கோரி மெரினாவில் போராட்டம் நடத்தி கைதானவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மெரினாவில் இன்று மாலை சிலர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மெரினாவில் போராட்டம் நடைபெறுவதாக வெளியான தகவல் சமூக வலைதளங்களிலும் பரவியது. மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அனைவரையும் சொந்த ஜாமீனில் போலீசார் விடுவித்தனர்.