மதுரை: ஆண்கள் கழிப்பறையில் தோனி படத்துடன் அறிவிப்பு பலகை வைத்துள்ள, மதுரை மாநகராட்சியின் நடவடிக்கைக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

போஸ்டருக்கு பிரலமானது மதுரை என்பது அனைவரும் அறிந்ததே. நடிகர் விஜயின் அரசியல் உள்பட பல்வேறு சர்ச்சைக்ளுக்கு அஸ்வாரமே மதுரையில்தான் அரங்கேறும். இந்த நிலையில், மதுரை மாநகராட்சி ஆண்கள் கழிவறையில் கிரிக்கெட் வீரர் தோனியின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகராட்சி ராஜாஜி சிறுவர் பூங்கா வளாகத்திற்குள் உள்ள கழிவறையில், ஆண்கள் கழிவறை பகுதியில் டோனியின் படத்துடன் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.  அதுபோல,  மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள ஆண்கள் கழிவறையில் தோனியின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதை காணும் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களுடம் மாநகராட்சியின் நடவடிக்கைக்கு கண்டனங்களை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பதவிட்டு வருகின்றனர். உடனே தோனி படத்தை நீக்க வேண்டும் என்றும் வலியுறத்தப்பட்டு வருகிறது.