சென்னை,

மிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீரென டில்லி செல்கிறார்.  கடந்த வாரம் ஓபிஎஸ் பிரதமரை சந்தித்துள்ள நிலையில் தற்போது ஈபிஎஸ் பிரதமரை சந்திக்க டில்லி செல்வது அரசியல் விமர்சகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாளை மாலை சென்னையில் இருந்து புறப்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வரும் புதன்கிழமை பிரதம்ர் மோடியை சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

கடந்த வாரம் திடீரென டில்லி சென்று பிரதமர் மோடியை முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சந்தித்துள்ள நிலையில், தற்போதைய முதல்வர் ஈபிஎஸ் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், வரும் புதன்கிழமை ஈபிஎஸ் மோடியை சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் டில்லியில் இருந்து வரும் தகவல்கள் கூறுகிறது.

வறட்சி நிவாரணம் தொடர்பாக பிரதமரை முதல்வர் சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.