பிக் பாஸ் சீசன் 3 யின் முக்கிய போட்டியாளராக திகழும் மீரா மிதுன் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து மிஸ் தென்னிந்தியா போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்றார் என்கிற குற்றச்சாட்டின் பேரில் சமீபத்தில் அவரின் பட்டம் பறிக்கப்பட்டது .
இந்நிலையில் தான் திருமணமாகி கணவருடன் மூன்று நாட்கள் மட்டுமே வாழ்ந்ததாகவும், அவர் ஒரு சைக்கோ என்பதால் அவரை விட்டு பிரிந்துவிட்டேன், என்றும் மீரா மிதுன் கூறி வருகிறார்.
ஆனால் மீரா மிதுனின் உறவினர் ஒருவர் இதை மறுத்ததோடு, மீரா மிதுன் திருமணமாகி இரண்டு வருடங்கள் கணவருடன் வாழ்ந்ததாக கூறியுள்ளார் .
இந்த நிலையில், மீரா மிதுன் தனது கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.