சென்னை:

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வழங்கப்படும் கலைமாமணி விருது ஆகஸ்L 13ந்தேதி (13-8-2019) மாலை 4 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என்று  அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில்,  பல்வேறு கலைப்பிரிவுகளின் கீழ்  2011 முதல் 2018 வரையிலான 201 கலை வித்தகர் களுக்கு கலைமாமணி விருதுகள்  பெறும் கலைஞர்களின் பெயர் பட்டியலை தமிழக அரசு  கடந்த பிப்ரவரி மாதம்  அறிவித்தது. இந்த நிலையில் விருது வழங்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, அடுத்த மாதம் (ஆகஸ்டு) 13ந்தேதி அன்று மாலை 4 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால், கலைமாமணி விருது வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என்றும், விழாவில் விருது பெறுபவர்கள் தங்களின் அழைப்பிதழுடன் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தமிழ்நாடு இயல் இசை நாட மன்றத்தின் செயலாளர் தங்கவேலு அறிவித்து உள்ளார்.

திரையுலகினர்:

(2011ம் ஆண்டு)

நடிகர்கள் – ஆர்.ராஜசேகர், பி.ராஜீவ்,
நடிகை – குட்டி பத்மினி,
நகைச்சுவை நடிகர் – பாண்டு,
நடன இயக்குனர் – புலியூர் சரோஜா
பாடகி – சசி ரேகா

2012ம் ஆண்டு
நடிகர்கள் – என்.மகாலிங்கம், எஸ்.எஸ்.செண்பகமுத்து,
நடிகைகள் – டி.ராஜஸ்ரீ, பி.ஆர்.வரலட்சுமி
கானா பாடல் கலைஞர் – உலகநாதன்
இயக்குனர் – சித்ரா லட்சுமணன்

2013ம் ஆண்டு
நடிகர், இயக்குனர் – சி.வி.சந்திரமோகன்
பாடகர் – ஆர்.கிருஷ்ணராஜ்
நடிகர் – பிரசன்னா,
நடிகை – நளினி
பழம்பெரும் நடிகைகள் – குமாரி காஞ்சனா தேவி, சாரதா
நடிகர்கள் – ஆர்.பாண்டியராஜன், டி.பி.கஜேந்திரன்
நாட்டுப்புறப் பாடற்கலைஞர் – வேல்முருகன்
நாட்டுப்புறப் பாடகி – பரவை முனியம்மா

2014ம் ஆண்டு
நடிகர்கள் – கார்த்தி, சரவணன், பொன்வண்ணன்
இயக்குனர் – சுரேஷ் கிருஷ்ணா
பாடகி – மாலதி
நடன இயக்குனர் – என்.ஏ.தாரா

2015ம் ஆண்டு
நடிகர் – பிரபுதேவா
இயக்குனர் – ஏ.என்.பவித்ரன்
இசையமைப்பாளர் – விஜய் ஆண்டனி
பாடலாசிரியர் – யுகபாரதி
ஒளிப்பதிவாளர் – ஆர்.ரத்தினவேலு
பாடகர் – கானா பாலா

2016ம் ஆண்டு

நடிகர்கள் – சசிகுமார்,  எம்.எஸ்.பாஸ்கர்,  தம்பிராமையா,  சூரி

2017ம் ஆண்டு
நடிகர்கள் – விஜய் சேதுபதி, சிங்கமுத்து,
நடிகை – பிரியா மணி
இயக்குனர் – ஹரி
இசையமைப்பாளர் – யுவன் சங்கர் ராஜா

2018ம் ஆண்டு
நடிகர்கள் – ஸ்ரீகாந்த், சந்தானம்
தயாரிப்பாளர் – ஏ.எம்.ரத்தினம்
ஒளிப்பதிவாளர் – ரவிவர்மன்
பாடகர் – உன்னி மேனன்