பொறியியல் கலந்தாய்வு: 52 சதவிகித கல்லூரிகளில் 90 சதவிகித இடங்கள் காலி!

Must read

சென்னை:

மிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு முடிவு பெற்றுள்ள நிலையில், 52% தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளில் 90% இடங்கள் காலியாக உள்ள தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் 479 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் வழங்கப்படும் பிஇ, பிடெக் படிப்புகளில் 1 லட்சத்து 72 ஆயிரத்து 940 இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு உரியவை. இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்களில் சேர 1 லட்சத்து 33 ஆயிரத்து 116 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர். அவர்களில் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து 1 லட்சத்து ஆயிரத்து 692 பேர் கலந்தாய்வுக்கு தகுதி பெற்றனர்.

முதல்கட்டமாக விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கும், தொழிற்கல்வி பிரிவினருக்கும் ஜூன் 25 முதல் 28-ம் தேதி வரை சென்னையில் நேரடி கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதையடுத்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது.

‘இதில் மாநிலத்தின் 470 கல்லூரிகளில், 250 அல்லது 52% கல்லூரிகளில் மூன்றாவது சுற்று கலந்தாய்வு முடிவில் 10% இடங்களை கூட நிரப்ப முடியவில்லை என்று கூறப்படுகிறது.

35 கல்லூரிகளில் ஒரு இருக்கை கூட நிரப்பத் தவறிவிட்டன, அதே நேரத்தில் 117 கல்லூரிகள் ஆன்லைன் கவுன்சிலிங்கில் 10 இடங்களுக்கும் குறைவான இடங்களை நிரப்ப முடிந்தது என்றும்  தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுவரை பொறியியல் கலந்தாய்வில் பங்குபெற்ற  24,131 மாணவர்களுக்கு  இறுதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளதாகவும், மொத்த இடங்களான  1,67,101 இடங்களில், 45,663 அல்லது 27% இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கிண்டி சென்ட்ரல் எலக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (சி.இ.சி.ஆர்.ஐ), காரைக்குடி, மற்றும் சேலத்தின் இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனம் ஆகிய 3 கல்லூரிகள் மட்டுமே  100% இடங்களை நிரப்பி உள்ளன.ள். 80% க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்பிய 36 கல்லூரிகளில் 18 அரசு கல்லூரிகள். என்றும், பெரும்பாலான மாணவர்கள்,  “மாணவர்கள் கணினி அறிவியல், ஐடி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொடர்பு பொறியியலை விரும்பினாலும், சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ரூமென்டேஷன் போன்ற படிப்புகளில் சிலர்  மட்டுமே சேர்ந்துள்ளதாகவும் தெரிக்கப்பட்டு உள்ளது.

ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் மற்றும் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் போன்ற படிப்புகள் மாணவர்களிடையே நம்பிக்கையை இழந்துள்ளது, இந்த கலந்தாய்வு மூலம் தெரிய வந்துள்ளதாகவும், மூன்று அரசு  கல்லூரிகள் மட்டுமே 100% இடங்களையும், 36 கல்லூரிகள் 80% க்கும் மேற்பட்ட இடங்களையும் நிரப்பி உள்ளதாகவும், பொறியியல் தொழிற்கல்வி  ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி கூறி உள்ளார்.

இதுவரை மூன்று சுற்றுங்கள் முடிவடைந்துள்ள நிலையில், காலி இடங்களை நிரப்ப, 4வது, 5வது சுற்று கலந்தாய்வு நடத்தினாலும், மாணவர்கள் சேர்க்கையில் முன்னேற்றம் இருக்காது என்று தெரிவித்துள்ளவர், மாணவர்கள் சேராத கல்லூரிகளில் பல ஆசிரியர்கள் தங்களது வேலையை இழக்க நேரிடும் என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிவித்து உள்ளார்.

More articles

Latest article