பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட மீரா மிதுன் பல்வேறு சர்ச்சைகளுக்கு பின் வெளியேற்றப்பட்டார்.

வெளியே வந்த இவர், ஜோ மைக்கிலை கொலை செய்ய திட்டம் தீட்டிய ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்தில் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் இருந்து தான் நடித்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் சன் பிக்ஸர்ஸ், பாண்டி ராஜ், சிவகார்த்திகேயன் தான் என்று கூறி மீண்டும் சர்ச்சையை கிளப்பினார் மீரா மிதுன்.

இந்த நிலையில் தற்போது மீரா மிதுன், நவீன் இயக்கத்தில் அக்னி சிறகுகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

இதை கண்டு அதிர்ச்சியடைந்த நவீன் அக்னிச் சிறகுகள் படத்தில் ஷாலினி பாண்டேவுக்கு பதிலாகத் தான் அக்‌ஷரா ஹாசன் நடிக்கிறார்.மீரா மிதுன் முதன்மை கதாநாயகி ஒப்பந்தம் செய்யப்படவில்லை என் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த மீரா, ‘ஏஞ்சலினா ஜோலி போல நடிப்பதற்கு சில காட்சிகளை என்னிடம் காட்டி பேசினீர்கள். தொடர்ந்து இவ்வாறு பொய் சொல்லிக் கொண்டே இருந்தீர்கள் என்றால், இது தொடர்பாக வீடியோ ஆதாரமும் என்னிடம் உள்ளது. அதை ஊடகத்திடம் வெளிப்படுத்துவேன் என பதிலளித்துள்ளார்.

இதற்கு நவீன், ‘உங்களுக்குப் பெரிய பிரச்சனை மீரா. தயவு செய்து மருத்துவரைப் பாருங்கள். இது தான் உங்களுடைய முட்டாள் தனமான ட்வீட்களுக்கு, நான் அளிக்கும் கடைசி பதில் என்று கூறினார்.

இதற்கு மீண்டும் பதிலளித்த மீரா மிதுன், ஒரு பெண்ணை எப்படி மருத்துவரைப் பார்க்கச் சொல்லலாம். நம் இருவருக்கும் நடந்த உரையாடல்களை வெளியிட்டால் உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும் பிரச்சனை தான். என்ன வெளியிடவா? என்று அவரை தாக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.