80-களில் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் நடித்ததின் மூலம் பிரபலமான மீனா, பிறகு ரஜினிகாந்த், சத்யராஜ், பிரபு என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

தற்போது வரை பெரும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதனிடையே மீனாவின் குழந்தை பேபி நைனிகா விஜய் நடித்த ‘தெறி’ திரைப்படத்தில் விஜய்க்கு மகளாக நடித்ததன் மூலம் அனைவராலும் அறியப்பட்டார்.

இந்த நிலையில்தான் மீனா மற்றும் மீனாவின் மகள் நைனிகா இருவரும் அண்மையில் எடுத்துக்கொண்ட ஃபோட்டோ ஷூட் ஒன்று படு வைரலாகி வருகிறது. இணையத்தில் ரசிகர்களிடையே ட்ரெண்டாக இருந்து வரும் இந்த ஃபோட்டோஷூட்டில் மீனாவும் அவருடைய மகளும் ஒரே மாதிரியான நிறத்தில் உடை அணிந்து போஸ் கொடுத்து இருக்கின்றனர்.

மீனாவின் மகள் நெடுநெடுவென வளர்ந்து விட்டதாகவும் அவரை பார்க்கும் பொழுது சிறிய வயது மீனாவை பார்ப்பது போலவே இருப்பதாகவும் மீனாவின் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த ஃபோட்டோக்களுக்கு கமெண்ட் கொடுத்திருக்கிறார் ரம்பா.