எள்  Sesamum indicum

எள்ளின் சத்து விபரங்கள் இங்கே காணலாம்

http://nutrition.agrisakthi.com/detailspage/GINGELLY%20SEEDS/13

இளைத்தவனுக்கு எள்ளைக்கொடு, கொழுத்தவனுக்கு கொள்ளைக் கொடு என்பது முதுமொழி

அதற்கேற்ப எள்ளில் இரும்புச்சத்து இருப்பதால் இரத்த சோகை, உடல் சோர்வு உடல் பலமின்மை இவைகளை சரி செய்யும் (கறுப்பு எள்ளில் தான் அதிகளவு சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ளது. அதே சமயம் வெள்ளை மற்றும் சிவப்பு எள்ளில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.)

உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்துவதில் எள் மற்றும் எள் எண்ணெய் பெரும் பங்காற்றுகிறது.  கப ரோகம் மற்றும் பித்த நோய் போன்றவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. காச நோய் உள்ளவர்கள் எள்ளை எடுத்துக்கொள்ளலாம்.

குரலை சரி செய்வதில்  , குரல் வளத்தினை மேம்படுத்தவும் எள்  எண்ணெய் உதவுகிறது.

பெண்களுக்கு வயிற்றில் உதிரப்போக்கு சரியாக வராத பட்சத்தில் வயிற்று கடுப்பு போன்றவை சரி செய்து உதிரத்தினை சரியாக வெ ளிப்படுத்த உதவுகிறது. எனவே பரும் அடைந்த இளம்பெண்க ளுக்கு  நம் பண்பாட்டில் எள் உருண்டைகளை வழங்குவது தொன்றுதொட்டு இருந்துவருகிறது

எள் சங்ககாலம் முதற்கொண்டே நம் பயன்பாட்டில் இருந்து வருகிறது, நம் சமையலில் நீண்ட நேர பொரிப்புக்கு  எள் எண்ணெய் பயன்படுத்தப்பட்டுவருகிறது, (பொதுவாக நீண்ட நேரம் பொரித்தால் நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பாக மாறும் ) எனவேதான் இந்த எண்ணெயை நல்லெண்ணெய் என்றும் அழைக்கின்றோம்.

எள் எண்ணெயை பண்டிகை காலங்கள் , புதன் மற்றும் சனி தோறும் ஆண்கள்,  செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் எள் எண்ணெய் குளியல் மிகச்சிறந்தது. இதனால் உடல் உஷ்ணம் போக்கும், கண்ணுக்கு குளிர்ச்சி தரும். இதை கண்களில் தேய்து குளித்தால் கண்ணில் உள்ள அழுக்கு நீங்கி பார்வை மேம்படும்

எள் எண்ணெய் கொண்ட உணவுகளை உட்கொண்டால் எளிதில் ஜீரணம் ஆகும் மற்றும் மூல நோய் தீரும்

இந்தியாவில் பொதுவாக மூன்று நிறங்களில் உள் உள்ளது. வௌ்ளை, கருப்பு, சிகப்பு ஆகிய வண்ணங்களில் எள் உள்ளது

சித்த மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள்  எள்ளை த விர்ப்பது நல்லது. ஏனெனில் இது மருந்துகளை முறிக்கும் தன்மை கொண்டது

ஆன்மீகம்

எள் எண்ணெயில் தீபம் ஏற்றி வழிபட்டால் கர்ம வினைகள் தீிரும் என்பது , கருப்பு எள் சனி பகவானுக்கு உரியது என்று தொன்றுதொட்டு குறிப்பிடப்பட்டுவருகிறது எள்ளு .

எள்ளுமருந் தைக்கெடுக்கு மேறனலாக் திண்மைதரு
முள்ளிலையைச் சேர்க்கு முதிரத்தைத் தள்ளுமிரு
கண்ணுக் கொளிகொடுக்குங் காசமுண்டாம் பித்தமுமாம்
பண்ணுக் கிடர்புரியும் பார்.
–சித்தர் பாடல்

தலைக்கு தடவி வர முடி உதிர்வு குறையும், பித்தம் குறையும், உடல் உஷ்ணமும் குறையும், கண்ணுக்கு குளிர்ச்சி தரும்.

எள் உருண்டை, எள் தேங்காய்ப்பால் சாதம் என பல உணவு வகைகள் உள்ளன, இதை நாள்தோறும் உண்டு வந்தால் உடலுக்கு நன்மை தரும். ஆனால் நீரிழிவு நோய் உள்ளவர்கள்  வெல்லமோ, சர்க்கரையோ  சேர்த்து சாப்பிடுதல் கூடாது. மாறாக எள் எண்ணெயை பயன்படுத்தலாம்

மருத்துவர் பாலாஜி கனகசபை, M.B.B.S, PhD
அரசு மருத்துவர்
கல்லாவி
99429-22002