சித்த மருத்துவம்  மற்றும் ஆன்மீகத்தில் மூலாதாரம் அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. உண்மையில் மூலாதாரம் என்பது  உடலில் தண்டுவடத்தின் அடிப்பகுதியில், பிறப்பு உறுப்புகளுக்கும், மலத்துவாரத்திற்கும் இடையே அமைந்துள்ளது. அதே சமயம் பெண்களுக்கு கருப்பையின் கழுத்துப்பகுதியில் அமைந்துள்ளது.

மனித உடலில்  முதுகுத் தண்டுவடத்தின் கடைசி எழும்பு

Cocex bone  இருப்பிடம்

இது குண்டலினி சக்தியின்  இருப்பிடமாக கருதப்படுகிறது. குண்டலினி  (குண்டம்+ அலி) + னி = குண்டலினி) என்பது ஆண் மற்றும் பெண் அல்லாத சக்தியாகும். இது அலி சக்தியாக கருதப்படு கிறது. இதை எரி சக்தி, மின்காந்த சக்தி  எனவும் குறிப்பிடப்படுகிறது.

மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி சக்தி எழுப்புவதின் மூலம் ஆன்மீக சாதனைகள் மூலம்  சித்தர்கள் , ஞானிகள் ஞானமடைந்து இருக்கிறார்கள். இந்த மூலாதார சக்கரமானது கணபதியின் இருப்பிடமாகவும்  பிரதான சக்தியாகவும், நான்கு இதழ் கொண்ட தாமரை இதழ்கள் எனவும் சித்தர்கள் குறிப்பிடுகிறார்கள்
மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி சக்தியை இட கலை, பிங்கலை, சுவாசத்தின் மூலமாக  நிறுத்தி சுழி முனை நாடியின் மூலமாக ஆக்ன சக்கரத்திற்கு கொண்டு செல்வதே ஒரு ஞானியின் சாதனையாகக் கருதப்படுகிறது. இந்த சுவாசத்தினை திசை மாற்றவும்,  வழி நடத்தவும் சித்தர்கள் அறிந்திருந்தார்கள். இது சித்தர் ஞான சர நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது

மூலதாரத்தில் இருக்கும் குண்டலினி சக்தியை எழுப்பி உடலை காயகல்பமாக ஆக்கும் கலையை சித்தர்கள் நன்கு அறிந்திந்தார்கள். இக்கலையை இந்நூற்றாண்டில் யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்கள் எளிய முறையில் பயிற்றுவித்தார்.

குண்டலினி சக்தியை கீழ்கண்ட முறைகள் மூலம் எழுப்ப முடியும்

பிரணாயாமம் மூலம் ஏற்றுதல்.
மந்திரங்கள் மூலம் ஏற்றுதல்.
காந்தப்பயிற்சி மூலம் ஏற்றுதல்.
அதிர்வுகள் மூலம் ஏற்றுதல்.
காயகற்பம் மூலம் ஏற்றுதல்.

பயன்கள்
மூலதார சக்கரத்தில் தியானம் செய்வதால் மன அமைதி, உடல் ஆரோக்கியம் மேம்படும்.

ஆனால் இப்பயிற்சியை முறையான குரு மூலமே  மேற்கொள்ளவேண்டும்.  உடலுக்கு மருத்துவம் பார்க்க மருத்துவர்கள் இருந்தாலும் மனதை அமைதியாக்க யோகா அவசியம் என்பது உண்மையான கருத்தே. எனவே நாள்தோறும் குறைந்த பட்சம் 20 நிமிடமாவது யோகப்பயிற்சியை தகுந்த குருவின் மூலம் மேற்கொள்ளவும்

அடுத்த வாரம் சுவாதிஷ்டானம் எனும் முறையை அறிவோம்!,

தொடர்ந்து பத்திரி்க்கை.காம் தளத்தினை படித்துவாருங்கள், உடல் நலம் மற்றும் யோகா குறித்த செய்திகளை நீங்கள் அறிந்துகொள்ளலாம்

மருத்துவர் பாலாஜி கனகசபை, M.B.B.S, PhD
அரசு மருத்துவர்
கல்லாவி
99429-22002