கற்பூரவல்லியின் மருத்துவப்பயன்கள் 

கற்பூரவல்லி (Anisochilus Carnosus)
கற்பூரவல்லி ஆசிய, ஆப்பிரிக்க, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களில் பரவலாக காணப்படும் மிக முக்கிய மருத்துவத்தாவரமாக கருத்தப்படுகிறது. இதை இந்தியன் மின்ட் என்றழைப்பர்

பயன்பாடு
கற்பூரவல்லி இரண்டு இலை, வாயில் மென்று சாப்பிட்டால் வாய் தூ்நாற்றம் போகும் , உமிழ் நீர சுரக்கச்செய்யும், வாய்ப்புண்ணை குணப்படுத்தும்.நுரையீரல்
நுரையீரலில் உள்ள சுவாசக்குழாயில் ஏற்படும் நோய்கள் , மார்ப்புச்சளி, ஆஸ்துமா, இருமல் ,COPD, கிருமிகளால் ஏற்படக்கூடிய சளி, சுவாச நோய் கட்டுப்படுத்தும். மேலும் நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்கவும் உறுதுணையாக இருக்கிறது.
இதயம்
இலையின் சாறு இதய பலஹீனத்தைத் தடுக்கிறது.
வயிறு
வயிறு சம்பந்தமான ஜீரணக்கோளாறு. Irritable Bowel Syndrome போன்ற நோய்களை கட்டுப்படுத்துகிறது
மலச்சிக்கலைப் போக்கும், வாந்தி வயிற்று எரிச்சலைக் கட்டுப்படுத்தும்.  வயிற்றில் இருக்கும் புழுக்களை அகற்றும் தன்மை கொண்டது
தோல்
இதனுடைய எண்ணெயைத்தேய்த்து குளிப்பதன் மூலம் மனதுக்கு அமைதியும், சருமத்தில் உள்ள கிருமிகளை அளிக்கும் தன்மைகொண்டது, தலையில் இதன் எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் பொடுகுகள் நீங்கும்.
மேலும்
அம்மைக்கொப்பளங்கள் , புண்கள் ஆற்றும் தன்மைகொண்டது, ஒவ்வாமையால் ஏற்படும் கொப்பளம் மற்றும் தீக்காயங்களை ஆற்றும் நல்ல மருந்தாக இருக்கிறது.
வலி நிவாரணி
வலி நிவாரணியாகவும், முடக்குவாதத்திற்கு நன்மருந்தாகவும் Anti inflammatory activity ஆகவும் செயல்படுகிறது.
பூச்சிக்கடிகளுக்கு இதன் சாறை தடவுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்
பெண்களுக்கு
தாய்மார்களுக்கு நன்றாக பால் சுரக்கச்செய்கிறது
இனப்பெருக்க உறுப்பில் ஏற்படக்கூடிய பூஞ்சை, பாக்டீரியா வைரஸ் தொற்றுக்களை இது கட்டுப்படுத்துகிறது.
காய்ச்சலுக்கு மருந்தாகவும், வைரஸ் காய்ச்சலை குணப்படுத்தி, நோய் எதிர்ப்பு திறனை ஏற்படுத்துகிறது. Immune Booster ஆகவும் செயல்படுகிறது
இதில் இருக்கும் ஆன்டாசிடென்ட்ஸ் வளர்ச்சிதை மாற்றத்தினை சீர்ப்படுத்திட இதில் இருக்கும் விட்டமின் ஏ, சி ஆகியவை உதவுகிறது
சித்த மருத்துவம் கற்பூரவள்ளி.
காச இருமல் கதித்தம
சூரிஐயம் பேசுபுற நீர்க்கோவை
பேருங்காண்-வீசுசுரங் கற்பாறை
யொத்து நெஞ்சிற் கட்டுகபம்
வாதமும்பே கற்பூர வள்ளிதனைக்
கண்டு
காசம்
பொடியிருமல்
அம்மைக்கொப்பளம்
மார்புச்சளி
சிலேத்தும தோஷம்
வாதக்கடுப்பு
இவை நீங்கும்.
உபயோகிக்கும் முறை
இஞ்சி ஒரு துண்டு, 3-4 மிளகு, துளசி இலை 5, கற்பூரவல்லி இலை இரண்டு சம அளவு 250 மிலி தண்ணீரில் கொதிக்கவைத்து பாதியளவு சுண்டவைத்தபின் அந்நீர ஆறவைத்தபின் ஒரு ஸ்பூன் தேன் கலந்து அருந்தலாம்
மேலும் இரண்டு அல்லது மூன்று இலை சாறு எடுத்து  தேன் கலந்து  ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அரை தேக்கரண்டு அளவு  கொடுத்தால் சளி இருமல் குறையும்,  பெரியவர்களுக்கு இரண்டு தேக்கரண்டி.
மருத்துவர் பாலாஜி கனகசபை MBBS, PhD(yoga)
அரசு மருத்துவர்
கிருஷ்ணகிரி மாவட்டம்
99429 22002