கர்ச்சூர்க்காய் (Phoenix Dactylifera Dried).
உலர்ந்த பேரிச்சம்பழத்தின் சத்துவிபரம்
http://nutrition.agrisakthi.com/detailspage/DATES,%20DRIED/150
ஆன்டாக்சிடெண்ட், ஆன்டி இன்ப்ளேமெட்டரி, நுண்கிருமி நாசினி மற்றும் அதிக இரும்புசத்துக்கொண்டது.
http://nutrition.agrisakthi.com/detailspage/DATES,%20DRIED/150
ஆன்டாக்சிடெண்ட், ஆன்டி இன்ப்ளேமெட்டரி, நுண்கிருமி நாசினி மற்றும் அதிக இரும்புசத்துக்கொண்டது.
பெண்கள்
பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. இதிலிருக்கும் வேதிப்பொருட்கள் ஹார்மோனை சீர்ப்படுத்துகிறது. இரத்த உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. இனப்பெருக்கு உறுப்பை பாதுகாக்கிறது. கர்ப்பப்பையும் பாதுகாக்கிறது. மகப்பேறு காலத்தில் அடிவயிற்று தசைகளை நன்கு விரிவடையச் செய்து சுகப்பிரசவத்திற்கு உதவுகிறது.
புற்றுநோய்
பேரிச்சை புற்றுநோய் வராமல் தடுக்கவும் , செல்களின் உள்ள வளர்ச்சிதை மாற்றத்தினை சீர்செய்து செல்களை நீண்ட நாள் நோயின்றி வாழ உதவுகிறது
இதிலிருக்கும் சத்துப்பொருட்கள் சிறுநீரகத்தின் செயல்திறனையும் மற்றும் கல்லீரலின் செயல்திறனையும் அதிகப்படுத்துகிறது. கல்லீரலில் உள்ள மெட்டபாலிசத்தை ஒழுங்குப் படுத்துகிறது.
இதிலிருக்கும் இருக்கும் கிருமி எதிர்ப்பு திறன் வயிற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது.
இரத்த சோகை உள்ளவர்களுக்கு தினமும் இதை உண்டுவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சித்த மருத்துவம்
வாயிலுண்டா மூற்றறலை மாற்றும்
பசியில்லை யாயிலுண்டா லுண்டா
மதுமேக-நோயின் பெருநீர்
மறுக்குமினும் பெண்களைக்
கூ டுங்காற் றருநீர்மை கர்ச்சூர்க்காய்
தான்
பேரிச்சம்பளத்தை மிதமாகப் புசித்தல் வேண்டும். இது தேகத்திற்கு பலத்தைக் கொடுக்கும். ஜீரணசக்தியை உண்டாக்குவதுடன் மலச்சிக்கலை நீக்கும். இன்னும் அரோசகம், சுரம், தாகம், பித்தம் ஆகியவற்றை போக்கும், இரத்தச்சோகைப்போக்கும்
உண்ணும் முறை
காலையில் இரண்டிலிருந்து மூன்று உலர்ந்து பேரிட்சை எடுத்துக்கொள்ளலாம். இதை உண்டபிறகு பால் அருந்தினால் நலம்
சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பின்னர் பயன்படுத்தலாம்
மருத்துவர் பாலாஜி கனகசபை MBBS, PhD(yoga)
அரசு மருத்துவர்
கிருஷ்ணகிரி மாவட்டம்
99429 22002