ஆசியாவிலேயே முதன் முறையாக கொரோனா நோயாளிக்கு  நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை! சென்னை மருத்துவமனை சாதனை…

Must read

சென்னை: நுரையீரல் கடுமையாக சேதமடைந்த கொரோனா தொற்று நோயாளிக்கு, நுரையில் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை.

ஆசியாவிலேயே  கொரோனா நோயாளிக்கு நடத்தப்பட்ட  முதல் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை இதுவென்று கூறப்படுகிறது.  மருத்துவ உலகில் இது சாதனையாக கருதப்படுகிறது. இந்த சாதனையை சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை நிகழ்த்தி உள்ளது.

இதுகுறித்து அந்த மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

டெல்லியைச் சேர்ந்த 48வயதான கொரோனா நோயாளிக்கு ஜூலை 8ந்தேதி கொரோனா உறுதி யானது.  அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில், கொரோனா தொற்றும்,  ஃபைப்ரோஸிஸ் காரண மாக அவரது நுரையீரலும்  கடுமையாக சேதமடைந்தது. மேலும் அவரது  நுரையீரலின் ஒரு சிறிய பகுதி மட்டுமே செயல்பட்டுக்கொண்டிருந்தது. இதனால், அவருக்கு  மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவரது ஆக்சிஜன் செறிவு குறைந்துவிட்டதால், ஜூன் 20ந்தேதி  அன்று வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு  காசியாபாத் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், கடந்த  ஜூலை 20 ம் தேதி அன்று  காசியாபாத்தில் இருந்து சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேருக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டார். அவருக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜூலை 25 அன்று  அவருக்கு ECMO -வில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டார். சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில்,  அவருக்கு மாற்று நுரையீரல்களைப் பொருத்தி சிகிச்சை அளிக்க  மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி,  ஆகஸ்டு 27ந்தேதி  அன்று வெற்றிகரமாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை (Lung Transplant)  செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை  இருதய அறிவியல் தலைவரும் இயக்குநரு மான டாக்டர் கே. ஆர். பாலகிருஷ்ணன் மற்றும் இதய மற்றும் நுரையீரல் மாற்று திட்டத்தின் இயக்குநர் மற்றும் அவரது குழுவினர் தலைமை தாங்கி, வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நோயாளி ஐ.சி.யுவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுடு வருகிறரு. அவர் நல்ல முன்னேற்றத்தைக் காட்டுகிறார் என்று எம்ஜிஎம் ஹெல்த்கேர் கூறி உள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது,   ஆசியாவில் செய்யப்பட்டுள்ள முதல்முறை என்றும், கொரோனா  லாக்டௌன் தொடங்கியதிலிருந்து இந்த மருத்துவமனையில் நடந்துள்ள இரண்டாவது நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை இதுவென்றும் அந்த மருத்துவமனை தெரிவித்து உள்ளது.

More articles

Latest article