download
சென்னை:
ருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்து அவசர சட்டம் கொண்டு வந்ததற்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
மருத்துவ நுழைவுத் தேர்வை ஓராண்டுக்கு ரத்து செய்யும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அவசர சட்டத்திற்கான கோப்பில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டார்.
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:
“நடப்பாண்டு மருத்துவ நுழைவுத் தேர்வை ஒத்தி வைத்ததற்கு நன்றி. அவசர சட்டத்தால் இட ஒதுக்கீட்டின் பயனை மாணவர்கள் இந்த ஆண்டு அனுபவிப்பார்கள். நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பால், லட்சக்கணக்கான மாணவர்களும், பெற்றோர்களும், மனஅழுத்தத்தில் இருந்து விடுபட்டுள்ளனர். எதிர்காலத்திலும் மருத்துவ நுழைவுத் தேர்வை எழுத நிர்பந்திக்க கூடாது”  என்று  அந்த கடிதத்தில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.