புதுச்சேரி:
புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நான்கு மாணவர்கள் முதல் மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள்.
தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் இன்று காலை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், 498 மதிப்பெண்கள் பெற்று 4 மாணவர்கள் புதுவை மாநிலத்திலேயே முதல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
download (1)
எஸ்.பிரிதா, (அலோர்பவம் மேல்நிலை பள்ளி), ஜூடி மெக்கலின் (குளோனி மேல்நிலை பள்ளி), வைஷ்ணவி தேவி (குளோனி மேல்நிலை பள்ளி),  ஆகிய ள் மூவரும் பிரெஞ்சு மொழிப்பாடம் எடுத்து படித்தவர்கள். தமிழ் மொழிப்பாடமாக எடுத்து படித்தவர்களில் திருக்கண்ணுர், சுப்பிரமணிய பாரதி மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த கீர்த்தனா 498 மதிப்பெண்கள் பெற்றார்.
இதேபோல், 497 மதிப்பெண்கள் பெற்று 18 மாணவர்கள் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர். . மூன்றாம் இடத்த  496 மதிப்பெண்களுடன் 13 மாணவர்கள் பெற்றனர்.
பிரெஞ்சு பாடத்தில் 72 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆங்கிலப் பாடத்தில் ஒரே ஒரு மாணவர் மட்டும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றார்.