ராஞ்சி: ஊடகங்கள் கங்காரு நீதிமன்றங்களை நடத்துகின்றன, இதனால் நீதிபதிகள் முடிவெடுப்பதில் கடினமான நிலை உருவாகி வருவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டமாக தெரிவித்து உள்ளார்.

கங்காரு நீதிமன்றம் என்பது, சட்ட அங்கீகாரமில்லாத நீதிமன்றம். அதாவது நமது பாஷையில் கூறப்போனால் கட்டப்பஞ்சாயத்து. அரசியல்வாதிகள், கட்டப் பஞ்சாயத்து செய்பவர்கள் சட்டத்தை மதிக்காமல் செயல்படுவதையே கங்காரு நீதிமன்றம் என்று விமர்சிக்கப்படுகிறது.

சமீப காலமாக ஊடகங்களில் டிபேட் என நடத்தப்படும் விவாதங்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றன. டிபேட்டை நடத்துபவரின் கேள்விகளுக்கு பதில் கூறும் போது, பல கருத்துக்களை சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் நூபுர் சர்மா விவகாரமும் அவ்வாறுதான் சர்ச்சையாகி நாடு முழுவதும் பெரும் வன்முறைக்கு வித்திட்டது. இதை விசாரித்த நீதிமன்றமும், முதலில் டிபேட்டை நடத்திய ஊடகவியலார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

இந்த நிலையில், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் eநடைபெற்ற நிகழ்ச்சில் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ஊடகங்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வதுபோல, கங்காரு நீதிமன்றங்களை நடத்துகின்றன என கடுமையாக சாடினார்.

சமீபகாலமாக, ஊடகங்கள் தாமதமாக முன்வந்து கங்காரு நீதிமன்றங்களை நடத்துவதை நாம் காண்கிறோம், இதன் காரணமாக, சில சமயங்களில் அனுபவம் வாய்ந்த நீதிபதிகள் கூட முடிவெடுப்பது கடினம் என்று கூறியவர், நீதி வழங்குவது தொடர்பான பிரச்சனைகள் குறித்த ஊடகங்களின் தவறான தகவல் மற்றும் நிகழ்ச்சி நிரல் விவாதங்கள் ஜனநாயகத்தின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதாக உள்ளது என்று வருத்தப்பட்டவர், ஊடகங்கள்,  உங்கள் பொறுப்புகளை மீறி செயல்படு வதன் மூலம், நீங்கள் நமது ஜனநாயகத்தை இரண்டு படிகள் பின்னோக்கி கொண்டு செல்கிறீர்கள் என்று விமர்சித்தார்.  அச்சு ஊடகங்களுக்கு இன்னும் குறிப்பிட்ட அளவு பொறுப்பு உள்ளது, அதேசமயம் எலக்ட்ரானிக் மீடியாவுக்கு எந்த பொறுப்பும் இல்லை, இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி என்வி ரமணா கூறினார்.