திருவனந்தபுரம்: சிறுமிகள், பள்ளி மாணவிகளிடையே கர்ப்பம் அதிகரித்து வருவதால், பள்ளி மாணாக்கர்களுக்கு செக்ஸ் கல்வி போதிப்பது அவசியம், இதுகுறித்து மாநில அரசு  ஆய்வு செய்ய வேண்டும் என கேரள மாநில உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் இளம்பெண்கள் மட்டுமின்றி, சிறுமிகள், பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்படுவதும், கர்ப்பம் தரிப்பதும் அதிகரித்து வரு கிறது. இதை தடுக்க பல்வேறு சட்டங்களை மத்திய, மாநில அரசுகள் கொண்டுவந்தாலும், நவீன காலத்துக்கு தகுந்தவாறு, பாலியல் புகார்களும் அதிகரித்துக் கொண்டேதான் வருகின்றன. இதற்கு பள்ளி குழந்தைகள் இடையே செக்ஸ் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம் என விமர்சிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கேரளாவில் 13 வயது சிறுமியை அவரது மைனர் சகோதரனே பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செக்ஸ் என்றால் என்ன என தெரியாத வயதில் அவர்கள் இருவரும் இணைந்ததில், அந்த சிறுமி கர்ப்பிணி ஆனார். அந்த சிறுமியின் வயிற்றில் உருவான 30 வார கருவை கலைக்க அனுமதிகோரி, சிறுமியின் பெற்றோர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க அனுமதி வழங்கியதுடன், . மேலும் கருகலைப்பு அரசு மருத்துவமனையில் நடைபெற வேண்டும். இதில் குழந்தை உயிருடன் இருந்தால், அதற்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்,  குழந்தையை பெற்று கொள்ள சிறுமியின் பெற்றோர் மறுத்தால், அந்த குழந்தையை வளர்க்க அரசே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து, இதுபோன்ற சம்பவங்களை தடுப்பது குறித்து மாநில அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிமன்றம், சில பரிந்துரைகளை தெரிவித்தது.

அதில்,  தற்போது கேரளாவில் மைனர் சிறுமிகள் கர்ப்பம் தரிப்பது அதிகரித்து உள்ளது. 

சமூக ஊடகங்கள் மற்றும் இணையங்கள் மூலமாக தவறான கருத்துக்களை பார்க்கும் நிலை குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது. 

இதனால்தான் இதுபோன்ற பாலிய்ல் செயல்கள் அதிகரித்து வருகின்றன.

இதுபோன்ற பாலியல் வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர்கள், பெரும்பாலும் நெருங்கிய உறவினர்களாக உள்ளனர்.

இதனால், செக்ஸ் குறித்து மாணவ மாணவிகளுக்கு விழுப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

செக்ஸ்  தொடர்பான விழிப்புணர்வை குழந்தைகளுக்கு ஏற்படுத்துவது அவசியமாகிறது.

அதனால், பள்ளிகளிலேயே குழந்தைகளுக்கு செக்ஸ் கல்வியை கற்று கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போதைய சூழலில் இது மிகவும் அவசியம் என கோர்ட்டு கருதுகிறது என்று தெரிவித்துள்ளது.