திருவனந்தபுரம்:  எந்தவொரு சரியான காரணமும் இல்லாமல் குடிமக்களின் தனிப்பட்ட வாழ்க்கையை எட்டிப்பார்க்க ஊடகங்கள் அல்லது அரசு நிறுவனங் களுக்கு உரிமை இல்லை என  கேரள உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.   ஆன்லைன் மீடியா சேனல்களை கடுமையாக சாடியுள்ளது.

ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் எட்டிப்பார்க்க எந்த தனிநபருக்கோ, ஊடகங்களுக்கோ, அரசு அமைப்புகளுக்கோ உரிமை இல்லை என்று கூறிய நீதிமன்றம்,  ஆன்லைன் சேனல்கள் காழ்ப்புணர்ச்சியில் செயல்பட்டு வருகின்றன  என்றும்,  ஒருவர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் அவரை இழிவுபடுத்தும் நோக்கில் ஆன்லைன் சேனல்கள் சில செய்தி வெளியிட்டு வருவது வருத்தமளிக்கிறது. ஒவ்வொரு மனிதனும் ‘தான்’ விரும்புவதை தனிப்பட்ட முறையில் செய்ய உரிமையுண்டு. முறையான காரணங்கள் இன்றி நாட்டின் குடிமக்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் எட்டிப்பார்க்க எந்த தனிநபருக்கோ, ஊடகங்களுக்கோ, அரசு அமைப்புகளுக்கோ உரிமை இல்லை என்று அதிரடியாக தெரிவித்து உள்ளது.

ஒரு பெண்ணின் அந்தரங்கத் தருணங்களை ஒளிபரப்பியதற்காக சில ஆன்லைன் மீடியா சேனல்கள் மீது கேரள உயர் நீதிமன்றம் சமீபத்தில் கடுமையாகக் கண்டனம் தெரிவித்தது மற்றும் சில ஆன்லைன் செய்தி சேனல்கள் “செய்தியை விட கேவலமாக வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன” என்றும் விமர்சித்திருந்தது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதி வி.ஜி.அருண் அடங்கிய தனி பெஞ்ச், சமீபத்திய ஊடகங்களில் தனிநபர்களின் தனிப்பட்ட உள்ளடக்கத்தை செய்தி என்ற பெயரில் வெளியிடும் போக்கை கடுமையாக விமர்சனம் செய்தது.  “எனது கருத்துப்படி, மற்றொரு நபரின் தனிப்பட்ட தருணங்களை பொது பார்வைக்காக வெளியிடுவது, அதுவே, அவமானகரமான செயல். அத்தகைய நடவடிக்கையைத் தடுக்க எந்த சட்டமும் இல்லை என்றால். எந்த ஒரு நபரும், அது ஊடகங்களானாலும் சரி, அரசு நிறுவனங்களாயினும் சரி, இந்த நாட்டின் குடிமக்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் சரியான காரணமின்றி எட்டிப்பார்க்க உரிமை இல்லை என்று அதிரடியாக தெரிவித்தது.

மேலும்,  பரபரப்பான நோக்கத்திற்காக மட்டுமே இழிவுபடுத்தும் உள்ளடக்கத்தை வெளியிட்டதற்காக சில ஊடக சேனல்களை நீதிமன்றம் குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்ததுடன்,   சில சந்தர்ப்பங்களில் ஊடகங்கள், ஜனநாயகத்தின்  நான்காவது தூண்  என்ற அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது என்றும் சாடியது.

“சில ஆன்லைன் செய்தி சேனல்கள் செய்திகளை விட இதுபோன்ற தகவல்களை  வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. பொதுமக்களில் ஒரு பிரிவினர் இதுபோன்ற பரபரப்பான மற்றும் கேவலமான செய்திகளைவிரும்புகிறார்கள் என கூறியவர், இதுபோன்ற அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த எந்த வழிமுறையும் இல்லாத நிலையில், ஒரு சிலரின் செயலால், நமது ஜனநாயகத்தின் சக்திவாய்ந்த தூணான நான்காவது தூண் மீதான நம்பிக்கை சிதைந்து போகிறதா என்பதை அந்த சேனல்கள் சுயபரிசோதனை செய்து முடிவு செய்ய வேண்டும்.

‘பாரத் லைவ்’ என்ற ஆன்லைன் சேனலைச் சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டை நீதிமன்றம் விசாரித்தது, புகார்தாரருக்கு எதிராக, அவர் தாழ்த்தப்பட்ட பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்து, அவதூறான உள்ளடக்கத்தை இடுகையிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பல விதிகளைத் தவிர, 1989 ஆம் ஆண்டு பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம், புகார்தாரரின் வாழ்க்கையின் தனிப்பட்ட தருணங்களை வெளியிட்டதற்காகவும், அவரை “ஒழுக்கமடற்ற” பெண்ணாக சித்தரிக்க முயன்றதற்காகவும் குறிப்பிட்டு, கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு  செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அருள், ஆன்லைன் மீடியாக்கள் மீது கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.