சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் நாளை முதல் 12ந்தேதி வரை, கறிக்கடைகள் செயல்படாது சென்று சென்னை மாநகராட்சி முன்னதாக அறிவித்தது. தற்போது, மகாவீர் ஜெயந்திக்காக ஒருநாள் மட்டுமே மூடுவதாக விளக்கம் அளித்து உள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுப்பதிலும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் சென்னை மாநகராட்சி தடுமாறி வருவது இதன் மூலம் வெளிப்பட்டு உள்ளது.
சீனாவில்இருந்து பரவிய கொரோனா வைரஸ் இதுவரை 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி துவம்சம் செய்து வருகிறது. இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் பேயாட்டம் ஆடி வருகிறது.
இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ள தமிழகஅரசு, வீடு வீடாக சோதனை நடத்தவும்உத்தரவிட்டு உள்ளது.
இந்த நிலையில், நாளை முதல் ஏப்ரல் 12 வரை இறைச்சிக் கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டு இருப்பதாக மாலையில் செய்தி வெளியானது. ஏற்கனவே சென்னையில் மீன் சந்தைகளை மூட உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது கறிக்கடைகளையும் மூட உத்தரவிட்ட விவகாரம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
ஆனால், சிறிது நேரத்தில் மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. அதில், மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு 6ந்தேதி (திங்கட்கிழமை) அன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாகவே நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக எந்தவொரு விழாக்களும் நடைபெறாமல் முட்ங்கி உள்ள நிலையில், வடஇந்தியர்களின் பண்டிகையை காரணம் காட்டி அன்று ஒருநாள் மட்டும் விடுமுறை என்று விளக்கம் அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் நலனில் அக்கறை உள்ளதாக காட்டிக்கொள்ளும் சென்னை மாநகராட்சிக்கு கறிக்கடைகளை மூடுவதில் என்ன தடுமாற்றம்….