சுவாமி சரணம் என்ற சொல்லிற்கு என்ன பொருள்?

ஐயப்ப பக்தர்கள், ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை செல்கிறார்கள். அவ்வாறு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் சுவாமி சரணம் என்று அடிக்கடி கூறுவார்கள். அதற்கு என்ன பொருள் என்று தெரிந்து கொள்வோம்.
சுவாமி என்ற உச்சரிப்பின் வெளிப்பாட்டினால் சொல்லிப் படிப்பவர்களுக்குச் சுபம் உண்டாகிறது.
‘ச” என்ற எழுத்திற்கு நம்மிடம் உள்ள காமக் கிராதிகள் எனும் சாத்தான்களை அழிக்கும் சத்த சம்காரம் என்று பொருள்.
‘ர” என்ற எழுத்திற்கு ஞானத்தைத் தரவல்லது என்று பொருள்.
‘ண” என்ற எழுத்திற்குச் சாந்தத்தைத் தரவல்லது என்று பொருள்.
‘ம்” முத்ரா என்ற எழுத்திற்குத் துக்கங்களைப் போக்கவல்லது. சுவாமிக்கு மகிழ்ச்சி தரக்கூடியது.
ஆகையால், நம்முடைய நாபிக் கமலத்தில் இருந்து எழும் பிராண வாயுவை இதய மார்க்கமாகச் செலுத்தி, நாவின் மூலம் சப்தமாக உயிர்ப்பித்து ‘ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா” என ஒலிக்கும்போது, மூல மந்திர ஒலியுடன் நம் காமக் கிராதிகளை அழித்து ஞானத்தைத் தர ஐயப்பனைச் சரணடைகிறோம் என்று பொருள்.
Patrikai.com official YouTube Channel