சாப்பாடும்  அதன் தெய்வீக விளக்கமும்
🍏🍎🍐🍊🍋🍉🍇🍓🫐🍒
 🍒🍒 வாழை இலை 🫐🫐வாழ்க்கை பசுமையாக இருக்கிறதே என அதில் மயங்கி விடக்கூடாது. அதனால்தான் அதில் முதலில் தண்ணீர் தெளித்துக் கொள்ள வேண்டும்.
🍒🍒 பாயசம் பட்சணம்
 பாயசத்தில் பிறந்த 
ஸ்ரீ ராமனையும் தயிர் வெண்ணெய் பிரியனான 
ஸ்ரீ கிருஷ்ணனையும் சாப்பிடும்போது நினைக்க வேண்டும்.
 
🍒🍒 குழம்பு
இதில் தான் என்ற அகங்காரம் இருக்கிறது தான் என்பது வெண்டைக்காய் சுண்டைக்காய் பூசனிக்காய் கத்தரிக்காய் முருங்கைக்காய் இவை தான் இந்த தான்.
நாம் பிறந்து நமக்கு விவரம் தெரிந்த உடன் நமக்கு தானென்ற அகங்காரம் வந்து விடுகிறது. அதனால் முதலில் அந்த தானை கொஞ்சமாகத் தீர்க்க வேண்டும்.
🍒🍒 ரசம் 
தான் இல்லாததால் ஒரு தெளிவான மனநிலை வந்துவிடுகிறது. அதாவது ரசமான மனநிலை அதுதான் ரசம். தான் இல்லாத தெளிவான மனநிலையில் தான் ரசமான எண்ணம் வரும் அது வந்தவுடன் எல்லாமும் இனிப்பாகப் பாசமாகவும் ரசனமாகவும் ஆகிவிடுகிறது.
🍒🍒 மோர்
பாலிலிருந்து தயிர் வருகிறது தயிரைக் கடைந்தால் வெண்ணெய் வருகிறது வெண்ணெய்யை உருக்கினால் நெய்  வருகிறது இதில் மீதமிருப்பது மோர் இதிலிருந்து எதையும் பிரித்து எடுக்க முடியாது. மோருக்கு மறுபிறவி கிடையாது.
  🫐🫐அதைப் போல் நாமும் அகங்காரத்தை விட்டு மனம் தெளிந்து அழகான வாழ்க்கையை அனுபவித்து இனிமையாக வாழ்ந்து கடைசியில் பிறவி இல்லாமல் இறைவனின் திருவடியை அடைவோம்.