பேருந்துக் கட்டண உயர்வு போராட்டம் : திமுகவுக்கு வைகோ ஆதரவு

Must read

சென்னை

மிழகத்தில் பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து திமுக நடத்த உள்ள ஆர்ப்பாட்ட போராட்டத்துக்கு மதிமுக சார்பில் வைகோ ஆதரவு அளித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் பேருந்துக் கட்டணம் திடீரென இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.    இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.    திமுக சார்பில் வரும் 27ஆம் தேதி அன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்ட போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்ட போராட்டத்துக்கு மதிமுக ஆதரவு அளித்துள்ளது.   மதிமுக வின் பொதுச் செயலாளர் வைகோ  இந்தப் போராட்டத்தில் திமுகவுடன் மதிமுகவும் பங்கேற்கும் என அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியும் இந்த போராட்டத்தில் திமுகவை ஆதரிக்கப் போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article