சென்னை:  தி.மு.க. கூட்டணியில்  தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்த ம.தி.மு.க. தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழுவை அமைத்து அக்கட்சியின் தலைவர்  வைகோ அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழக அரசியல்களம் அதகளமாக மாறி வருகிறது. இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவி வருகிறது. இதன் காரணமாக,  இளைஞர்களின்  வாக்குகள்   நடிகர் விஜய்க்கு ஆதரவாகவே மாறும் என அச்சம்  அரசியல் கட்சிகளிடையே  எழுந்துள்ளது. இதனால் வாக்குகளை பெற அரசியல் கட்சிகள் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனர். மாற்று கட்சியைச் சேர்ந்தமுக்கிய பிரமுகர்களை தங்கள் கட்சிகளுக்கு இழுப்பதில் வெற்றி கண்டு வருகின்றன. இதனால்  தமிழக அரசியல் களம் தகதகவென தகிக்க தொடங்கி உள்ளது.

அ.தி.மு.க. அணியில் பா.ஜ.க., அ.ம.மு.க., பா.ம.க., த.மா.கா.. புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. . தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க.. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.

இந்த நிலையில், திமுக சார்பில் கூட்டணி கட்சிகளிடையே  தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்துள்ளது. இந்த குழு இன்றுமுதல் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.  இதில் காங்கிரஸ் உள்பட  சில கூட்டணி கட்சிகள்  அதற்கான குழுவை அமைத்து தயாராக உள்ளன. அதன் தொடர்சசியாக ம.தி.மு.க. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக குழு அமைத்து பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

அந்த குழுவில் ம.தி.மு.க. அவைத் தலைவர் அர்ஜுனராஜ், செந்திலதிபன், ஜீவன், சேஷன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

[youtube-feed feed=1]