சென்னை:
முதல் முறையாக மருத்துவ பாடப்புத்தகங்களை தமிழில் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் முதல் முறையாக மத்தியபிரதேச மாநிலத்தில் இந்தியில் 3 மருத்துவ படிப்பு பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட்டன. அதேபோல் உத்தரபிரதேசத்திலும் மருத்துவம், என்ஜினீயரிங் பாடப்புத்தகங்கள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் முதல் முறையாக, தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்காக மருத்துவ படிப்பு பாடப்புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணிகள் நடக்கின்றன.

தமிழில் மொழிபெயர்க்கும் பணிகளில் மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் 30 பேரும், பயிற்சி டாக்டர்களும் ஈடுபட்டிருக்கின்றனர். மொத்தம் 25 மருத்துவ பாடப்புத்தகங்களை மொழிபெயர்க்க திட்டமிட்டிருப்பதாகவும், அதில் 13 பாடப்புத்தகங்கள் முக்கியமான பாடங்களாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.