சென்னை,

மிழகத்தில் நீட் தேர்வு முடிவு அடைப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு  காணல் நீராக மாறியுள்ளது. மத்திய அரசின் உத்தரவுக்கு தமிழக அரசு பணிந்ததையே இது எடுத்துக்காட்டுகிறது.

தமிகத்தில் மருத்துவமணவர் சேர்க்கை கடந்த ஆண்டு வரை மதிப்பெண் அடிப்படையிலேயே நடைபெற்று வந்தது. ஆனால், மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டதிருத்தப்படி இந்த ஆண்டு முழுவதும் மருத்துவம் படிக்கும் விரும்புபவர்கள் நீட் எனப்படும் மருத்துவ நுழைவு தேர்வு எழுதி, அதில் கிடைக்கும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவார்கள்.

இதற்கு ஆரம்பத்தில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. பின்னர் போகப்போக எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல் மாணவ மாணவிகளையும், பெற்றோர்களையும் குழப்பத்தில் ஆழ்ந்த்தி வந்தது.

இந்நிலையில், இன்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் மருத்துவம் படிக்க விண்ணப்பம் வழங்கப் படும் என்றும், மருத்துவ மாணவர் சேர்க்கை நீட் தேர்வு முடிவு அடிப்படையிலேயே நடத்தப்படும் என்று  அறிவித்து உள்ளது.

இதன்படி வரும் 27ந்தேதி முதல் மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

அதையடுத்து அடுத்த மாதம் (ஜூலை) 17ந்தேதி கவுன்சிலிங் நடைபெறும் என்றும் அறிவித்து உள்ளது.

20 நாட்களில் விண்ணப்பம் வாங்கி, பூர்த்தி செய்யப்பட்டு, கவுன்சிலிங் நடத்தப்படுவதாக அரசு அறிவித்து உள்ளது.

எந்த விகிதாச்சார அடிப்படையில் தமிழக மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில், தமிழக மருத்துவ கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும் என்ற விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.