சென்னை: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (24ந்தேதி) மலை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, வரும் 27ந்தேதி முதல் கவுன்சிலிங் நடைபெற உள்ளது.

2021-2022ம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான  தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். சென்னை கீழ்ப்பாக்கம் மருததுவக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

தமிழ்நாட்டில்  அரசு மருத்துவக்கல்லூரிகளில் 4,349, தனியார் கல்லூரிகளில் 2,650 என மொத்தம் 6,999 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள 1,930 பி.டி.எஸ் இடங்களுக்கான தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டது. www.tnmedicalselection.net, www.tnhealth.tn.gov.in என்ற இனையதளத்தில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தர வரிசை பட்டியலில்,  நாமக்கல்லை சேர்ந்த கீதாஞ்சலி 710 மதிப்பெண்களுடன் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இவரைத்தொடர்ந்து, பிரவீன் – 710, பிரசன் ஜித்தன் – 710 மதிப்பெண்களுடன் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளனர்.

தமிழகத்தில் மொத்தமுள்ள 6,999 எம்.பி.பி.எஸ், 1,930 பி.டி.எஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.    மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 27-ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. ஜனவரி 27-ல் சிறப்புப்பிரிவு, 28, 29-ல் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஜனவரி 30 முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு முதன்முறையாக ஆன்லைனில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.