சென்னை:

மிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு அட்டவணை அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்  இங்கே தரப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்காததால், நீட் தேர்வு முடிவின் அடிப்படையிலேயே கலந்தாய்வு இன்று முதல் நடைபெறுகிறது.

நேரமின்மை காரணத்தால், கலந்தாய்வுக்கு வரசொல்லி தனித்தனியாக அழைப்பிதழ் கடிதம் அனுப்ப முடியாது என்றும், போன் மூலமே தகவல் தெரிவிக்கப்படும் என்றும், அழைப்பு கடிதத்தை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கி கொள்ளலாம் என்றும்  தெரிவிக்கப்பட்டது.

அதன்படி  www.tnhealth.org,  www.medicalselection.org ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்ய முடியாதவர்கள் தங்களின் தரவரிசை அடிப்படையில் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

கலந்தாய்வில் பங்கேற்போர் secretary selection committee, chennai-10  என்ற பெயரில் ரூ.500க்கான வரைவேலையைச் சமர்பிக்க வேண்டும். டிடி எடுக்க முடியாதவர்கள் பணமாகவும் செலுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

செலக்சன் போன், மாணவர்கள்  தங்கள் அசல் சான்றிதழ்களையும் சமர்பிக்க வேண்டும். அசல் சான்றிதழ்களை சமர்பிக்காதோருக்கு இடங்கள் ஒதுக்கப்படாது என்றும்,  பிற படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்கள், அசல் சான்றிதழ் ஒப்படைக்க முடியாவிட்டால்,  அந்தந்த கல்லூரிகளில் இருந்து அத்தாட்சி சான்றிதழ் பெற்று அதை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இன்று (ஆக.24) சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. 

நாளை ( ஆகஸ்ட் 25ம் தேதி)  பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.

இதில் தரவரிசையில் 1 முதல் 209 இடங்கள் வரை  பெற்றவர்கள் பங்கேற்கலாம். இவர்கள் 656 முதல் 368க்குள் நீட் மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும்.

ஆகஸ்ட் 26ம் தேதியும் பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

இதில் தரவரிசையில் 1,210 முதல் 2,673 இடங்கள்வரை பெற்றவர்கள் பங்கேற்கலாம். இவர்கள்  367 முதல் 296க்குள் நீட் மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும்.

ஆகஸ்ட் 27:  பொதுப்பிரிவு கலந்தாய்வு. தரவரிசை- 2,674 முதல் 4,269,  நீட் மதிப்பெண்கள்- 295 முதல் 254

ஆகஸ்ட் 28: பொதுப்பிரிவு கலந்தாய்வு, தரவரிசை- 4270 முதல் 7258, நீட் மதிப்பெண்கள்- 253 முதல் 209

ஆகஸ்ட் 29: பொதுப்பிரிவு கலந்தாய்வு, தரவரிசை- 7,259 முதல் 12,075, நீட் மதிப்பெண்கள்- 208 முதல் 170

ஆகஸ்ட் 29: தாழ்த்தப்பட்டோர் கலந்தாய்வு:  ஜாதி வாரி தரவரிசை 857 முதல் 1,628 வரை, நீட் மதிப்பெண்கள்- 169 முதல் 137 வரை

தாழ்த்தப்பட்டோர்: (அருந்ததியர்) தரவரிசை 75 முதல் 332 வரை,  நீட் மதிப்பெண்கள்-  169 முதல் 107

பழங்குடியினர்:  தரவரிசை 26 முதல் 86 , நீட் மதிப்பெண்கள் 169 முதல் 107 வரை.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.