சென்னை: மேயர் பிரியா முதலமைச்சரின் கான்வாய் வாகனத்தில் தொங்கிக்கொண்டு சென்றதை பாராட்ட வேண்டும், விமர்சிக்கக்கூடாது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.
200வார்டுகளையும், 16 சட்டமன்ற தொகுதிகளைக்கொண்ட சென்னை மாநகரத்தின் தலைவராக மேயர் பிரியா இருந்து வருகிறார். இவரை சமீப காலமாக திமுகவினரும், திமுக அமைச்சர்களும் அவமரியாதை செய்து வருகின்றனர். இதன் உச்சக்கட்டமாக அவர் கடந்த இரு நாட்களுக்கு முன்பு முதலமைச்சரின் கான்வாய் வாகனத்தில் தொங்கிகொண்டு பயணம் செய்த காட்சி, மக்களிடையே கடுமையாக விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், மாநகராட்சி மேயர் ப்ரியா ஆபத்தான முறையில் வெளியே தொங்கியபடி பயணம் செய்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அவர், மேயர் பிரியா மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்ஆணையர் அலுவலகத்திலும் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “மேயர் பிரியா தொங்கிக் கொண்டு வந்தது முதல்வரின் கார் அல்ல. அவருக்கு பாதுகாப்புக்கு வந்த கார். (கான்வாய் வாகன), ஒரு அசாதாரண சூழலில் உடனடியாக அவ்விடம் நோக்கி விரைய மேயர் பிரியா அவ்வாறு செய்துள்ளார் என வக்காலத்துக்கு வாங்கியதடன், அவர் வாகனத்தில் தொங்கிக்கொண்டு பயணம் செய்தபோதும், உள்ளே இருந்த பாதுகாப்பு காவலர்களை அவர் காரிலிருந்து வெளியேற்றவில்லை என கூறியிருப்பதுடன், ஒரு பெண்மணி இவ்வளவு விரைவாக ஆணுக்கு நிகராக இப்படி துணிச்சலோடு செய்கின்ற பணிகளை பாராட்டலாமே தவிர விமர்சிப்பது தேவையற்ற ஒன்று” என கூறியுள்ளார்.
8 கோடி மக்கள் தொகைக் கொண்ட ஒரு மாநகரத்தின் மேயருக்கு என தனி மரியாதை, பாதுகாப்பு உள்ளது. அவருக்கு என தனி கார் உள்பட பாதுகாப்பு வசதிகளும் உள்ளன. அப்படி இருக்கும்போது, அவர் வாகனத்தில் தொங்கிக்கொண்டு சென்றது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அரசியல்வாதிகளின் அடிமைத்தனத்தின் உச்சக்கட்டம் இது என விமர்சிக்கப்படுகிறது.