லக்னோ:

குஜன் சமாஜ் கட்சி தலைவரான மாயவதி டிவிட்டர்  சமூக வலைதளத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், தங்களது கருத்துக்களை யும், தாங்கள் பங்குபெறும் நிகழ்ச்சிகள் குறித்தும் அவ்வப்போது, சமூக வலைதளங்கான டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப்பில் பதிவிட்டு, தகவல்களை மக்கள் மற்றும் கட்சி தொண்டர்களிடையே பரப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவியான மாயாவதி தமது தகவல்களையும், கருத்துகளையும் மக்களிடம் விரைவாகக் கொண்டு சேர்க்கும் வகையில் தற்போதுதான் முதன்முறையாக டிவிட்டர் சமூக வலைதளத்தில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.

டிவிட்டரில் இணைந்திருக்கும் மாயாவதி  அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து தனது முதல் பதிவை  பதிந்துள்ளார்.

அதில்,   சகோதர சகோதரிகளே, இந்த டிவிட்டர் குடும்பத்தில் இணைந்திருக்கும் நான் என்னை அறிமுகம் செய்து கொள்கிறேன். இதுதான் எனது முதல் டிவிட்டர் பதிவு. @Sushrimayawati என்பது எனது அலுவலக டிவிட்டர் முகவரி. மக்களிடம் கருத்துகளையும், தகவல்களையும் பகிர்ந்து கொள்ள இந்த டிவிட்டர் பக்கத்தை இனி பயன்படுத்த உள்ளேன். நன்றி வணக்கம் என்று தெரிவித்துள்ளார்.

மாயாவதியின் டிவிட்டர் பதிவை லாலுவின் மகனும்,  ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவருமான தேஜஸ்வி யாதவ் வரவேற்று உள்ளார்.  இந்த இடத்தில் உங்களை சந்திப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஜனவரி 13ம் தேதி லக்னௌவில் நடைபெற்ற சந்திப்பின் போது டிவிட்டரில் இணையுமாறு நான் வைத்த கோரிக்கையை ஏற்று செயல்படுத்தியதற்கு நன்றி. நல்வரவு என்று பதிவிட்டுள்ளார். media and masses”.