மே 22ந்தேதியான இன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு நடைபெற்று இரண்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டது. இஅன்று 2வது ஆண்டு நினைவுதினம் தூத்துக்குடியில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான அறவழிப் போராட்டம், சமூக விரோதிகளால் வன்முறையாக மாறியதால், காவல்துறையின்ர அப்பாவி மக்கள் மீது குருவியை சுடுவது போல சுட்டுத்தள்ளினர். இதில் ஏராளமாபோர் பாதிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனத்துக்கு 15 பேர் உயிரிழந்தனர்.வரலாற்றில் வருவை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் இன்று இன்றோடு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நீதி கிடைக்காமல், கிடைக்கா விடாமலும் ஒரு தரப்பு காய்களை நகர்த்திக்கொண்டிருக்கிறது. நீதிமன்றங்களில் வழக்குகள் தூங்கிக் கொண்டிருக்கின் றன. மற்றொரு புறம் மத்திய மாநில அரசுகளை குளிர்விக்கும் வகையில் வோதாந்தா நிறுவனம் கோடிக்கணக்கில் நிதியை அள்ளி வீசிக்கொண்டிருக்கிறது.உலக முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஒரு மாபெரும் போராட்டமும், அதனால் பலியான உயிர்களும் இன்று வீணாகிக்கொண்டிருக்கிறது.
துப்பாக்கிச் சூடு நடத்தி பல உயிர்களை பலிகொண்டு 2 ஆண்டுகள் கடந்த நிலையில், இறந்தவர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தக்கூட முடியாத நிலை அங்கு நீடித்து வருகிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ளது, அதனால் அஞ்சலி ஊர்வலம் போன்று எதுக்கும் அனுமதி கிடையாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது…