லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான படம் ‘மாஸ்டர்’.

கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியதால் ஏப்ரல் வெளியீட்டிலிருந்து ‘மாஸ்டர்’ பின்வாங்கியது. தற்போது பொங்கல் வெளியீடு எனத் திட்டமிட்டு இருப்பதால், தீபாவளிக்கு டீஸரை வெளியிடப் படக்குழு முடிவு செய்திருந்தது.

தீபாவளியை முன்னிட்டு இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதிரடியான ட்ரைலர் வெளியாகியுள்ளது.விறுவிறுப்பான இந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த டீசர் இப்போது இந்திய அளவில் சாதனை செய்துள்ளது. 16 மணி நேரத்தில் 16 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் இந்த டீசரை பார்த்துள்ளனர்.

மேலும் இந்த டீசருக்கு 1.6 மில்லியனுக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது. இந்திய அளவில் அதிகம் லைக் செய்யப்பட்ட டீசரில் மாஸ்டர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதை தொடர்ந்து #MostLikedMasterTeaser என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் அடித்து வருகிறது.