லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகியிருக்க வேண்டிய படம் கொரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
‘மாஸ்டர்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இன்னும் படத்தின் முதல் பிரதி தயாராகவில்லை.
‘மாஸ்டர்’ படம் வெளியாகி முதல் நாளில் நல்ல வசூல் செய்துவிட்டால், மக்கள் திரையரங்கிற்கு வரத் தயாராகிவிட்டார்கள் எனக் கருதி மற்ற படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகும் என நினைக்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.
ஆனால் ‘மாஸ்டர்’ படக்குழுவினரோ இறுதிக்கட்டப் பணிகளை முடித்துவிட்டாலும், தீபாவளிக்கு வரலாம் என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளனர்.
கிராபிக்ஸ் காட்சிகள் இன்னும் இறுதிக்கட்டத்தை எட்டவில்லை. அவை முடிந்தவுடன் அனைத்தையும் ஒன்றிணைந்து முதல் பிரதி எடுக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

[youtube-feed feed=1]