விஜய்சேதுபதி தொகுத்து வழங்கும் ‘மாஸ்டர் செஃப்’ ஒளிபரப்புத் தேதி அறிவிப்பு….!

Must read

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

‘மாஸ்டர் செஃப்’ என்ற சமையல் நிகழ்ச்சி தற்போது சன் டிவி மூலம் இந்தியாவில் அறிமுகம் ஆகவுள்ளது. ‘மாஸ்டர் செஃப் இந்தியா – தமிழ்’ என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி தயாராகி வருகிறது.

தமிழில் விஜய் சேதுபதியும், தெலுங்கில் தமன்னாவும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது சன் டிவி புதிய ‘மாஸ்டர் செஃப்’ ப்ரோமோ வெளியிட்டுள்ளது. இதில் ஆகஸ்ட் 7-ம் தேதி ஒளிபரப்பு தொடங்கும் எனவும், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article