நடிகர் ஆர்யா மீது ரூ.71 லட்சம் மோசடி வழக்கு : விசாரணை ஒத்திவைப்பு…!

Must read

ஜெர்மனியைச் சேர்ந்த பெண், நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

ஜெர்மனியைச் சேர்ந்த வித்ஜா என்ற பெண், நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறி, அன்பை காட்டி 71 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

சாயிஷாவின் பெற்றோர் தனது கடன்கள் அனைத்தையும் செலுத்துவதாக உறுதியளித்ததால் திருமணத்துக்கு ஒப்புக் கொண்டதாகவும் ஆறு மாதங்களுக்குள் சாயிஷாவை விவாகரத்து செய்துவிட்டு, தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததால் மட்டுமே, தான் அந்த திருமணத்துக்கு சம்மதித்ததாக வித்ஜாவின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி, சிபிசிஐடி தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கேட்டதையடுத்து விசாரணையை ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

 

More articles

Latest article