தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தற்போது தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள சமையல் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணிபுரியவுள்ளார் விஜய் சேதுபதி. ‘மாஸ்டர் செஃப் இந்தியா – தமிழ்’ என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி தயாராகியுள்ளது.
வெளிநாட்டில் மிகவும் பிரபலமான ‘மாஸ்டர் செஃப்’ என்ற சமையல் நிகழ்ச்சியின் தமிழ் ஆக்கமான இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது சன் டிவி.
இதேபோல் தெலுங்கில் ஒளிபரப்பாகும் மாஸ்டர்ஸ் நிகழ்ச்சியை பிரபல நடிகை தமன்னா தொகுத்து வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வாரம் சனி கிழமை முதல் சனி & ஞாயிறுகளில் ஒளிபரப்பாக உள்ள இந்த புதிய மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் லேட்டஸ்ட் ப்ரோமோ வெளியாகி உள்ளது. கிளாஸ்ஸான லுக்கில் விஜய் சேதுபதி இருக்கும் இந்த ப்ரோமோ வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
Taste பண்ண ரெடியா இருங்க! #MasterChefTamil உங்கள் சன் டிவியில் மிக விரைவில். . . #SunTV #MasterChefOnSunTV #MasterChef @VijaySethuOffl pic.twitter.com/APBDtAl4PB
— Sun TV (@SunTV) July 12, 2021