கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் அமைந்துள்ள டாடா மினனணு தொழிற்சாலையில் பயக்கர தி விபத்து ஏற்பட்டது.

டாடா நிறுவனத்தின் மின்னணு உதிரிபாக தொழிற்சாலை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் செயல்பட்டு வருகிறது.  இன்று அதிகாலை 6 மணியளவில் இந்த தொழிற்சாலையில் உள்ள ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொழிற்சாலையில் தீயை அணைக்கும் பணியில் 7 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.  இதில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

டாடா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் பாதுகாப்பு நெறிமுறைகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டதால் ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

[youtube-feed feed=1]