டெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  பாராளுமன்ற உறுப்பினர்கள் முக கவசம் அணிய இரு அவைகளின் தலைவர்களும் அறிவுறுத்திய நிலையில், இன்றைய கூட்டத்தொடரின்போது,  நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி உள்பட உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து பங்கேற்றனர்.


சீனாவில் BF.7 என்ற உருமாறிய கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 1.48 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு 500-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதனால் சீனாவில் மீண்டும் கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் குஜாராத்தில் இருவர், ஒடிசாவில் ஒருவருக்கு BF.7 புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து பொதுமக்கள் கூடும் இடங்களில் முக்கவசம் அணி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா சோதனைகளையும் தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்தியஅரசு கடிதம் எழுதி உள்ளது. இதையடுத்து, பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கும் உறுப்பினர்கள் முக்கவசம் அணிய வேண்டும் என மக்களவை தலைவர் ஓம்பிர்லா, மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோர் உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

இதுதொடர்பாக மாநிலங்களவையில் பேசிய அவைத்தலைவர் தங்கர், கூட்டு முயற்சியால், கடந்த காலங்களில் கொரோனாவின் தாக்கத்தை இந்தியா சமாளித்தது , அதனால் தற்போது தொற்று பரவலை தடுக்க உறுப்பினர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும், முகக்கவசம் அணிந்து மக்களுக்கு உதாரணமாக திகழ வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததுடன், பிற நாடுகளில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதை  சுட்டிக்காட்டினார். என்றும் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், இன்றைய கூட்டத்தொடரின்போது, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பெரும்பாலான உறுப்பினர்கள்  முக்கவசம் அணிந்து காணப்பட்டனர். கோவிட் பயத்தின் மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும்  பல எம்.பி.க்கள் இன்று (வியாழக்கிழமை) பாராளுமன்றத்தில் முகமூடி அணிந்திருந்தனர்.