டெல்லி: கொரோனா பரவலை காரணம் காட்டி, ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையை நிறுத்த மத்தியஅரசு கடிதம் எழுதிய நிலையில், ஒற்றுமை யாத்திரை தொடரும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து உள்ளார். மேலும், ‘அப் ஆப் குரானாலஜி சமாஜியே’  என மத்தியஅரசை கிண்டல் செய்துள்ளார்.

கொரோனா வைரசின் மாறுபாடான ஒமைக்ரான் பிஎப்7 வேகமாக பரவி வருவதால் உலக நாடுகள் கவலை அடைந்து உள்ளன. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கி உள்ளன. இந்தியாவிலும் குஜாராத்தில் இருவர், ஒடிசாவில் ஒருவருக்கு BF.7 புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்தியாவிலும் கொரோனா தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இதையடுத்து,  ராகுல் காந்தி தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரையில் கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தி ராகுல் காந்திக்கு  கடிதம் எழுதியிருந்தார். அதில், “காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றுவரும் பாரத் ஜோடோ யாத்திரையால் கொரோனா பரவல் அதிகரித்துவிடும் அபாயம் இருக்கிறது. இதனால் யாத்திரையில் செல்பவர்கள் கட்டாயம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சானிடைசர் பயன்படுத்தி கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும். கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். யாத்திரையில் கலந்துகொள்பவர்கள், கலந்துகொண்ட பின்பும், கலந்துகொள்வதற்கு முன்பும் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்திய துடன்,  கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற முடியாவிட்டால், ராகுல் காந்தி தேச நலனைக் கருத்தில் கொண்டு தன் யாத்திரையை ஒத்திவைக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா விடுத்த கோரிக்கை, மோடி அரசுக்கு எதிராக காங்கிரஸின் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ராகுலின் ஒற்றுமை யாத்திரையை கண்டு, பாஜகவும், பிரதமர் மோடியும் பயந்து விட்டனர் என விமர்சித்து வருகின்ற னர். காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர்  ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, “ராகுல் காந்திக்குப் பெரும் வரவேற்பு கிடைத்துவருவதால், இந்த யாத்திரையைக் கண்டு பா.ஜ.க பயப்படுகிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து கூறிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்,   ஓமிக்ரான் துணை மாறுபாடு BF.7 கண்டறியப்பட் டதை அடுத்து, மத்திய அரசின் திடீர் தொடர் நடவடிக்கைகள் குறித்து மோடி அரசாங்கத்தை குறிவைத்து கடுமையாக விமர்சனம் செய்தார். கடந்த  ஜூலை, செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் குஜராத் மற்றும் ஒடிசாவில் ஓமிக்ரான் சப்-வேரியண்ட் BF.7 டிரைவிங் சீனப் பெருக்கத்தின் 4 வழக்குகள் பதிவாகியுள்ளன,

ஆனால் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா டெல்லியில் நுழையவுள்ளதால் தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ராகுல் யாத்திரை தொடரும் என்றவர்,  அவர் கிண்டலாக ‘அப் ஆப் குரோனாலஜி சமாஜியே’  என விமர்சித்தார்.  (‘குரோனாலஜி சமாஜியே’ என்பது உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் முதலில் என்.ஆர்.சி எதிர்ப்பு போராட்டங்களின் போதும் பின்னர் பெகாசஸ் வரிசையின் போதும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஒரு பிரபலமான அரசியல் சொல்லாட்சியாகும்).