வாஷிங்டன்:
முகக்கவசம் கொரோனா உயிரிழப்பை குறைக்கும் என்று அமெரிக்க மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ப்ரிவென்டிவ் மெடிசின் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில்,  ஏறக்குறைய ஒரு பில்லியன் மக்கள்தொகை கொண்ட 44 நாடுகளில் கொரோனா இறப்பு, முககவசம் அணியாமல் இருப்பதாலேயே ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து முன்னணி ஆய்வாளர் சஹர் கூறுகையில், இந்த ஆய்வு முகக்கவசம் அணிவது கொரோனா இறப்புகளைக் குறைக்குமா என்பதில் கவனம் செலுத்தியது என்றும், இதில் கொரோனா தொற்றுநோய்களின் போது முகக்கவசம் அவசியம் என்று தெரிய வந்துள்ளது என்று கூறினார்.
இந்த ஆய்வில் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் மக்களை உள்ளடக்கிய முகக்கவச கொள்கைகளைக் கொண்ட இருபத்தேழு நாடுகளும், முகக்கவச  கொள்கை இல்லாத 17 நாடுகளும் ஆய்வில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆய்வு செய்யப்பட்ட 44 நாடுகளில் 2,167,664 உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளும், முகக்கவசம் கட்டாயம் இல்லாத நாடுகளில் 1,253,757 பேரும், முகக்கவசம் கட்டாயம் உள்ள நாடுகளில் 913,907 பேரும் உயிரிழந்துள்ளனர்.
முகக்கவசம்  இல்லாத நாடுகளுடன் ஒப்பிடும்போது, ​​முகக்கவசம் நாடுகளில் இறப்புகளின் சராசரி தினசரி அதிகரிப்பு கணிசமாகக் குறைந்தது. ஆச்சரியப்படும் விதமாக, முகக்கவசம்  கட்டாயம் இல்லாத நாடுகள் குறைந்த கொரோனா  தினசரி இறப்பு அதிகரித்துள்ளது.