திருவனந்தபுரம்: மாசி மாத பிறப்பையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.
புகழ்பெற்ற கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை, பங்குனி உத்திர திருவிழா, ஓணம் போன்ற நாட்களில் கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இவை தவிர தமிழ் மாதத்தின் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
அதன்படி மாசி மாத திறப்பை ஒட்டி இன்று மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. இன்று முதல் பிப்ரவரி 17ஆம் தேதி வரை 5 நாட்கள் சபரிமலை கோயில் நடை திறந்திருக்கும் என தேவசம் போர்டு அறிவித்துஉள்ளது.
இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறந்து நெய் அபிஷேகம், பூஜைகள் நடக்கும். பின்னர் நாளை காலை முதல் வழக்கம்போல பூஜைகள் நடைபெறும். இந்த 5 நாட்களும் பக்தர்கள், முன்பதிவு செய்து வந்து தரிசிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.