மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் கபாலீஸ்வரர், காரணீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி உள்ளிட்ட ஆலயங்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் மெரீனா கடற்கரையில் கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.

சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று உற்சவ மூர்த்திகளை வழிபட்டு கடலில் புனித நீராடினர்.

தமிழகம் முழுவதும் மாசி பௌர்ணமியை ஒட்டி வந்த மக நட்சத்திரத்தை முன்னிட்டு பக்தர்கள் பல்வேறு கோயில்களில் வழிபட்டு ஆறுகள் மற்றும் குளங்களில் புனித நீராடினர்.