டில்லி

டிகர் கமலஹாசன் தேர்தல் கூட்டணிக்கு அழைத்ததை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிராகரித்து விட்டதாக அக்கட்சி செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நேற்று டில்லியில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமலஹாசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பிரகாஷ் காரந்த் தை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் இருவரும் பேசிய விவரங்கள் குறித்து அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயலர் கே பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

பாலகிருஷ்ணன், “மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் நேற்று டில்லியில் பிரகாஷ் காரந்தை சந்தித்து பேசினார். அப்போது அவர் மக்களவை தேர்தலில் தனது கட்சியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி வைத்துக் கொள்ளவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு பிரகாஷ் காரந்த் மறுத்துள்ளார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவுக்கு எதிராக ஏற்கனவே தங்கள் கட்சி கூட்டணியில் இணைந்து விட்டதை அவர் தெரிவித்துள்ளர். அவ்வகையில் தமிழகத்தில் தமது கட்சி ஏற்கனவே திமுக கூட்டணியில் இணைந்து விட்டதாகவும் அந்த கூட்டணியில் இணைந்து பாஜக – அதிமுக கூட்டணி யை வீழ்த்த உள்ளதாகவும் காரந்த் தெரிவித்துள்ளார்.

அத்துடன் டிசம்பர் மாதமே இந்த கூட்டனி உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் தற்பொது தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடைபெறுகிறது எனவும் கமலஹாசனுக்கு காரந்த் தெரிவித்துள்ளா. அத்துடன் இனி கூட்டணிக்கு வாய்ப்பில்லை எனினும் தமது நட்பு தொடரும் எனவும் கமலுக்கு அவர் உறுதி அளித்துள்ளார்.