மும்பை: மாருதி சுசுகி நிறுவனம், தொடர்ந்து 7வது மாதமாக தனது உற்பத்தியைக் குறைத்துள்ளது. கடந்த ஆகஸ்டில் மட்டும் அந்நிறுவனம் 33.99% உற்பத்தியை குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாகும் இந்த மாருதி சுசுகி.
இந்த ஆகஸ்ட் மாதம் அந்நிறுவனம் உற்பத்தி செய்த யூனிட்டுகளின் எண்ணிக்கை 111370. ஆனால், கடந்தாண்டு இதே ஆகஸ்ட் மாதம் உற்பத்தி செய்யப்பட்ட யூனிட்டுகளின் எண்ணிக்கை 168725.

கடந்த மாதம் பயணிகள் வாகனங்களின் உற்பத்தி எண்ணிக்கை 110214 என்பதாக இருந்தது. ஆனால், கடந்த 2018 ஆகஸ்ட்டில் இதே வகை வாகன உற்பத்தியின் எண்ணிக்கை 166161. இதன்மூலம் உற்பத்தியில் 33.67% சரிவு ஏற்பட்டுள்ளது.

ஆல்டோ, நியூவேகன்ஆர், செலரியோ, இக்னிஸ், ஸ்விஃப்ட், பெலெனோ மற்றும் டிஸிர் ஆகிய வகைப்பட்ட வாகன உற்பத்தியின் எண்ணிக்கை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 122824. ஆனால், இந்த ஆகஸ்ட் மாதத்தில் அந்த எண்ணிக்கை 80909.

இப்படியாக, பலவகையான வாகனங்களின் உற்பத்தியில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.