டில்லி:

ந்தியாவின் மிகப் பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான  மாருதி சுசூகி விற்பனை வரலாறு காணாத அளவில் சரிவை சந்தித்து வரும் நிலையில், 3000 ஒப்பந்த ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.

அவர்களுக்கான ஒப்பந்தங்கள் நீட்டிக்கப்படவில்லை. இதன் காரணமாக 3000 தொழிலாளர்கள் பணியிழப்பது உறுதியாகி உள்ளது.

இந்தியாவில் பெருமளவில் விற்பனையாகும் வாகனங்களில் மாருதி நிறுவனத்தின் தயாரிப்பு களுக்கு தனி மவுசு உண்டு. இந்தியாவில் விற்பனையாகும் கார்களில்  50 சதவிகித கார்கள் மாருதி சுசூகி நிறுவனத்துக்குச் சொந்தமானது என்று ஆய்வுகள் தெரிவித்து உள்ளன.

ஆனால், சமீப காலமாக உலகம் முழுவதும் எழுந்துள்ள பொருளாதார தேக்ககம், அதன் எதிரொலி யாக சரிந்து வரும் இந்திய பொருளாதாரம் போன்ற காரணங்களால், சமீபத்தில் மாருதி நிறுவனத்தின் வாகன விற்பனை 30 சதவிகிதம் அளவுக்கு சரிவை கண்டுள்ளது.

இந்த நிலையில், மாருதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் 3,000 ஒப்பந்த ஊழியர்களுக்கான ஒப்பந்தங்கள் நீட்டிக்கப்படவில்லை என மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஆர் சி பார்கவா சொல்லி உள்ளார்.

மத்தியஅரசு விதித்துள்ள கூடுதல் வரிகள், மின்சார வாகனம் தயாரிக்க அறிவுறுத்தல் போன்ற வைகளால் கார்களின் விலை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக அந் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் பேசியஆர் சி பார்கவா,  மாருதி சுசூகி, இனி சி என் ஜி ரக எரிவாயுவை எரிபொருளாகப் பயன்படுத்தும் கார்கள் மற்றும் ஹைப்ரிட் ரக கார்கள் உற்பத்தியில் கவனம் செலுத்தப் போவதாகவும் சொல்லி இருக்கிறார்.

கடந்த ஒன்பது மாதங்களாக தொடர்ந்து மாருதி சுசூகி நிறுவனத்தின் விற்பனை சரிந்து கொண்டே  வருவதால்,இந்தியா முழுவதும்  300 டீலர்கள் தங்கள் நிறுவனத்தை மூடிவிட்ட நிலையில், 3000 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை குறைக்க மாருதி நிறுவனம் முடிவு செய்துள்ளது.