பிஸினஸ்:
ல்யாணம் பண்ணிப்பார் வீட்டைக் கட்டிப்பார் என்பது இப்போதும் பொருந்திவரும் பழமொழி.  ஆனால், “ஒரு க்ளிக்கில் திருமணத்தை ஜாம் ஜாம் என்று முடிக்கலாம் என்கிறார், “மை கிராண்ட் வெட்டிங்” நிறுவனத்தை நடத்தும்  ஆர். சரத்.
இவர் “திருமண ஏற்பாடுகளை முழுமையாக கவனித்து  சிறப்பாக திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்திக்கொடுக்கும் இவர் இந்த துறையில் சுமார் 19 வருடங்களுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்:  கடந்த 7 ஆண்டுகளாக இவரது மனைவி ஜென் கேத்தரினுடன் இணைந்து இந்த பணியை செய்துவருகிறார்:
a
இப்பதோது புதுமையான முயற்சியாக ‘மை கிராண்ட் வெட்டிங்’ என்கிற செயலியை (App) உருவாக்கியுள்ளார்.
இந்த செயலி குறித்து பேசிய சரத், “இனிவரும் காலங்களில் கம்ப்யூட்டரும், அதையும் தாண்டி ஸ்மார்ட் போனும் தான் மக்களின் கைகளை ஆக்கிரமிக்கப்போகின்றன. அதனால் திருமணம் நடத்த விரும்பும் திருமண வீட்டார்கள் இந்த செயலியை (App)உபயோகிப்பதன் மூலம், இருந்த இடத்தில் இருந்தே தாங்கள் விரும்பும் பட்ஜெட்டில் (ஒரு லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை), ஹோட்டல், மண்டபம், மணவறை, கேட்டரிங் என ஒவ்வொரு பிரிவிற்கும் தாங்கள் விரும்பும் நபர்களை தேர்வுசெய்து, நிகழ்ச்சிகளை சீரியமுறையில் நடத்தலாம்.. இதன் மூலம் வழக்கமாக திருமணத்திற்கு ஆகும் செலவில் சுமார் 30% வரை மிச்சமாகிறது. ஒரு ஆப்.. ஒரு க்ளிக்.. அவ்வளவுதான்.. எளிதில் முடிக்கலாம் எந்த விழாவையும்!” என்கிறார் ஆர்.சரத்.
மேலும், “இந்த ‘மை கிராண்ட் வெட்டிங்’ நிறுவனத்துடன் சென்னை, பெங்களூர், ஹைதராபத், மும்பை, டெல்லி ஆகிய ஐந்து நகரங்களில் திருமணம் தொடர்பான சகல பணிகளையும் செய்து தரும் சுமார் 2500க்கும் அதிகமான வெண்டர்கள் (வணிகர்கள்) இணைந்துள்ளனர். வரும் நாட்களில் இன்னும் சில நகரங்களில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட இருக்கிறது. இணையதளத்தின் மூலமாகவோ அல்லது ‘மை கிராண்ட் வெட்டிங்’ ஆப் மூலமாகவோ இந்த வெண்டர்களை திருமண வீட்டாரே தேர்ந்தெடுத்து அவர்களிடம் நேரடியாக தொடர்புகொண்டு பேசிக்கொள்ளலாம். தாங்கள் விரும்பும் பாரம்பரிய முறைப்படி தங்கள் வீட்டு திருமணங்களை சிறப்பாக நடத்தலாம்.” என்றார் சரத்.
IMG_6984
‘கங்காரு’, ‘வந்தா மல’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நாயகி ஸ்ரீஜா, இந்த செயலியை பத்திரிகையாளர்கள் முன்னிலையில்  அறிமுகப்படுத்தினார்.
(மேடம் இந்த “கல்யாண ஆப்”பை எப்போ பயன்படுத்தப்போறார்னு கேட்டா.. “ஊஹூம்.. சினிமால நெறைய சாதிக்கணும்.. அதுக்கப்புறம்தான் கல்யாணம்” என்கிறார்!)